ADVERTISEMENT

அமீரகத்தில் மனிதவள சேவைகளை பெற இனி UAE பாஸ் கட்டாயம்..!! நேற்று முதல் அமல்..!!

Published: 19 Oct 2024, 5:20 PM |
Updated: 19 Oct 2024, 5:20 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மனித வளங்கள் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்தின் (MoHRE) தளங்களைப் பயன்படுத்துபவர்கள் வருகின்ற அக்டோபர் 18 முதல், UAE பாஸ் இல்லாமல் உள்நுழைய முடியாது என்று அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.

ADVERTISEMENT

பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் உட்பட மற்ற அனைத்து உள்நுழைவு விவரங்களும் அகற்றப்பட்டு மாற்றப்படும் என்றும் அமைச்சகம் இது குறித்து நடத்தப்பட்ட ஆலோசனையில் கூறியுள்ளது.

UAE பாஸ் என்பது குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்களுக்கான நாட்டின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் அடையாளமாகும், அதை வைத்து அனைத்து அரசாங்க சேவைகளையும் குடிமக்களும், குடியிருப்பாளர்களும் அணுகலாம்.

ADVERTISEMENT

அமீரகத்தில் உள்ள மற்ற நிறுவனங்களைப் போலவே, MoHRE அதன் இணையதளம், பயன்பாடு மற்றும் பிற ஆன்லைன் தளங்கள் வழியாக அதன் சேவைகளை எளிதாக அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது.

அமீரகத்தில் உள்ள நிறுவனங்களின் முதலாளிகள் பெரும்பாலும் பணி அனுமதி மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை வழங்குதல் மற்றும் ரத்து செய்தல் ஆகியவற்றைச் செயலாக்குவதற்கு அமைச்சகத்தின் சேனல்களைப் பயன்படுத்துகின்றனர்.

ADVERTISEMENT

மேலும், வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துபவர்களும் அதன் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். கூடுதலாக, தலைமறைவு அறிக்கைகளும் அமைச்சகத்தின் தளங்களில் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel