துபாய்: தேசிய தின விடுமுறையில் பூங்காக்கள், சுற்றுலா இடங்கள் செயல்படும் நேரத்தை வெளியிட்ட முனிசிபாலிட்டி!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் 53வது தேசிய தினத்தை முன்னிட்டு அமீரகக் குடியிருப்பாளர்கள் இந்தாண்டின் கடைசி நீண்ட வார இறுதியை அனுபவிக்கத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், விடுமுறையின் போது எமிரேட்டில் உள்ள பூங்காக்கள் மற்றும் இடங்களுக்கான செயல்பாட்டு நேரத்தை துபாய் முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக துபாய் முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜபீல் பார்க், அல் கோர் பார்க், அல் சஃபா பார்க், அல் மம்சார் பார்க் மற்றும் முஷ்ரிஃப் பார்க் ஆகியவை காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் என்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக, முஷ்ரிஃப் பூங்காவில் உள்ள மவுண்டன் பைக் ட்ராக் மற்றும் மவுண்டன் வாக்கிங் டிரெயில் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே குடியிருப்பாளர்களுக்காக திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குரானிக் பார்க் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்றும், கேவ் ஆஃப் மிராக்கிள்ஸ் மற்றும் க்ளாஸ் ஹவுஸ் காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை செயல்படும் என்றும் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஅதேசமயம், சில்ட்ரன்ஸ் சிட்டி ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும், வெள்ளி மற்றும் சனி நேரங்கள் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எமிரேட்டில் உள்ள பொது பூங்காக்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரை திறந்திருக்கும், அல் மர்மூம் லேக்ஸ் காலை 8 மணி முதல் 12 மணி வரை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என்பதையும் முனிசிபாலிட்டி வெளிப்படுத்தியுள்ளது.
இவற்றுடன், எமிரேட்டின் பிரபலமான துபாய் ஃபிரேம் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்றும் கூறியுள்ளது. மேலும் மாற்றியமைக்கப்பட்ட இந்த நேரங்கள் அனைத்தும் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் அமலுக்கு வரும் என்று ஆணையம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel