அமீரக செய்திகள்

DFC: பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் ‘Dubai Ride’ நிகழ்வு எப்போது..?? பங்கேற்பது எப்படி..??

துபாயில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் (DFC) என்ற மாபெரும் நிகழ்வில் 30 நாட்களுக்கு உடற்பயிற்சி சம்பந்தமான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும். அதில் துபாய் ரன் மற்றும் துபாய் ரைடு மக்களிடையே மிகவும் பிரபலமானதாகும். அந்தவகையில், அமீரகக் குடியிருப்பாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துபாய் ரைடு நிகழ்வின் இந்தாண்டு பதிப்பானது வருகின்ற நவம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை அன்று விறுவிறுப்பாக தொடங்கவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் பல்லாயிரக்கணக்கான சைக்கிளிங் ஆர்வலர்களும் குடியிருப்பாளர்களும் துபாயின் ஷேக் சையத் சாலையில் வழியாகச் செல்லும் போது, நகரின் முக்கிய அடையாளங்களைக் கடந்து செல்வார்கள். செவ்வாயன்று DFC அமைப்பாளர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையில், கடந்த ஆண்டு 35,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, தற்போதைய ஐந்தாவது பதிப்பு இன்னும் பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

துபாய் ரன்னைப் போலவே, துபாய் ரைடிலும் பங்கேற்பாளர்களுக்கு இரண்டு தனித்துவமான வழிகள் வழங்கப்படுகிறது. மேலும், இந்தாண்டு பதிப்பில் புத்தம் புதிய துபாய் ரைடு ஸ்பீட் லேப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.

4 கிமீ பாதை

துபாய் ரைடில் ஷேக் முகமது பின் ரஷீத் பவுல்வர்டு வழியாகச் செல்லும் குடும்பம், நண்பர்களுடன் செல்வதற்கு உண்டான பாதையான 4 கிமீ டவுன்டவுன் வழித்தடம் அடங்கும். போட்டி துபாய் மாலில் இருந்து காலை 6:15 மணிக்குத் தொடங்கும். இந்த நிதானமான மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் பாதை துபாய் ஓபரா மற்றும் புர்ஜ் கலீஃபாவைக் கடந்து செல்லும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

12 கிமீ பாதை

நீங்கள் மிகவும் கடினமான பாதையைத் தேடும் அனுபவமிக்க சைக்கிள் ஓட்டுநராக இருந்தால், ஷேக் சையத் சாலையில் உள்ள அற்புதமான 12 கிமீ வழித்தடத்தைத் தேர்வுசெய்து, புர்ஜ் கலீஃபா, மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர் மற்றும் துபாய் கேனலைக் கடந்து செல்லலாம். கூடுதலாக, காலை 6:15 மணிக்கு தொடங்கி, துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரிலிருந்து சஃபா பார்க் வரையிலான பந்தயம் ஐந்து இடங்களில் இருந்து தொடங்குகிறது: அவை மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர் (MOTF), அல் சத்வா, கோகோ கோலா அரங்கம், பிஸினஸ் பே மற்றும் லோயர் ஃபினான்ஷியல் சென்டர்.

துபாய் ரைடு ஸ்பீட் லேப்ஸ்

உங்கள் வேகத்தை சோதிக்க விரும்பினால் அல்லது துபாய் ரைடு நிகழ்வுக்கு முன் அதிக ஆற்றல் கொண்ட பயணத்தை அனுபவிக்க விரும்பினால், துபாய் ரைடு ஸ்பீட் லேப்ஸ் சரியான வாய்ப்பாகும். இது காலை 5 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும், இந்த புதிய ரைடு ஷேக் சையத் சாலை வழியாக சராசரியாக மணிக்கு 30 கிமீ வேகத்தில் சைக்கிள் ஓட்டும் வாய்ப்பை வழங்கும். 21 வயதுக்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த ரைடர்களுக்கு ஸ்பீட் லேப்ஸ் திறக்கப்பட்டுள்ளது.

இதில் சேர வேண்டுமெனில், சைக்கிள் ஓட்டுபவர்கள் சராசரியாக மணிக்கு 30 கிமீ வேகத்தை பராமரிக்க வேண்டும் மற்றும் இந்த வேகத்தைத் தக்கவைக்கும் திறன் கொண்ட பைக்கை ஓட்ட வேண்டும், பெலோட்டான் சவாரி அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் துபாய் ரைடு மார்ஷல்களின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இது முடிந்ததும், அவர்கள் துபாய் ரைடு நிகழ்வில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பங்கேற்கலாம் என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பதிவு செயல்முறை

துபாய் ரைடு மற்றும் துபாய் ஸ்பீட் லேப்ஸ் இரண்டிற்கும் பதிவு தனித்தனியாக உள்ளது. www.dubairide.com இல் மக்கள் இலவசமாக பதிவு செய்யலாம். அவர்கள் பதிவு செய்தவுடன், ஒரு QR குறியீட்டைப் பெறுவார்கள், இது நிகழ்வுக்கான அவர்களின் bib-ஐ சேகரிக்கத் தேவைப்படும். புதிய துபாய் முனிசிபாலிட்டி ஜபீல் பார்க் 30 x 30 ஃபிட்னஸ் வில்லேஜில் நவம்பர் 9 சனிக்கிழமை வரை பிப் சேகரிப்பு திறந்திருக்கும்.

பங்கேற்பாளர்கள் திங்கள் முதல் வியாழன் வரை மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை, வெள்ளிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை அல்லது வார இறுதி நாட்களில் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை செல்லலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!