UAE தேசிய தினம்: மெட்ரோ, டிராம், பஸ் இயக்க நேரத்தை நீட்டித்த துபாய்..!! முழு அட்டவணை உள்ளே…!!
அமீரகத்தில் உள்ள பெரும்பாலான குடியிருப்பாளர்கள் இந்த ஆண்டு தேசிய தின விடுமுறைக்காக நான்கு நாள் வார விடுமுறை நாட்களை அனுபவிக்கவுள்ள நிலையில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பயணிகள் நகரம் முழுவதும் வசதியாகப் பயணம் செய்வதை உறுதி செய்வதற்காக பொதுப் போக்குவரத்து வசதிகளின் இயக்க நேரத்தை நீட்டித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் எமிரேட்டில் பொது பார்க்கிங் பகுதிகளில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மேலும், இது மல்டி லெவல் டெர்மினல்களில் பார்க்கிங் செய்வதற்கு பொருந்தாது.
துபாய் மெட்ரோ மற்றும் டிராம் விடுமுறை நாட்களில் கூடுதல் மணிநேரம் இயங்கும், அதே நேரத்தில் அப்ரா, வாட்டர் டாக்சிகள் மற்றும் ஃபெர்ரி உள்ளிட்ட அனைத்தின் சேவை நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈத் அல் எதிஹாத் நீண்ட வார விடுமுறைக்கான திருத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து அட்டவணைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
துபாய் மெட்ரோ நேரங்கள்
- சனிக்கிழமை, நவம்பர் 30: காலை 5 – அடுத்த நாள் அதிகாலை 1 மணி வரை
- ஞாயிறு, டிசம்பர் 1: காலை 8 – அடுத்த நாள் 1 மணி
- திங்கள், டிசம்பர் 2: காலை 5 – அடுத்த நாள் அதிகாலை 1
- செவ்வாய், டிசம்பர் 3: காலை 5 – நள்ளிரவு 12 மணி
துபாய் டிராம் இயக்க நேரம்
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe- சனிக்கிழமை, நவம்பர் 30: காலை 6 மணி – அடுத்த நாள் அதிகாலை 1 மணி
- ஞாயிறு, டிசம்பர் 1: காலை 9 – அடுத்த நாள் 1 மணி
- திங்கள், டிசம்பர் 2: காலை 6 மணி – அடுத்த நாள் அதிகாலை 1 மணி
- செவ்வாய், டிசம்பர் 3: காலை 6 மணி – அடுத்த நாள் 1 மணி
பொது பேருந்துகள்
RTA, அமீரகத்தின் 53வது தேசிய தின விடுமுறையை முன்னிட்டு, சில பேருந்து வழித்தடங்கள் மற்றும் அட்டவணைகளை தற்காலிகமாக மாற்றியுள்ளது. நீங்கள் துபாய் பேருந்தில் செல்கிறீர்கள் என்றால், வழிகளைச் சரிபார்க்க முதலில் S’hail செயலியைப் பார்ப்பது நல்லது. குறிப்பாக பின்வரும் இரண்டு பேருந்து வழித்தடங்கள் நிறுத்தப்படும்:
அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து E100 பேருந்து பாதை நவம்பர் 29 முதல் டிசம்பர் 3 வரை இடைநிறுத்தப்படும். இந்த காலகட்டத்தில் இபின் பட்டுட்டா பேருந்து நிலையத்திலிருந்து அபுதாபிக்கு E101 வழியைப் பயன்படுத்துமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நவம்பர் 29 முதல் டிசம்பர் 3 வரை அல் ஜாஃபிலியா பேருந்து நிலையத்திலிருந்து E102 பேருந்து வழித்தடமும் நிறுத்தப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் பயணிகள் இபின் பட்டுட்டா பேருந்து நிலையத்திலிருந்து முசாஃபா கம்யூனிட்டிக்கு அதே வழியைப் பயன்படுத்தலாம்.
வாட்டர் டாக்ஸி நேரங்கள்
- மெரினா மால் – ப்ளூவாட்டர்ஸ் (BM3): மாலை 4 மணி – இரவு 11.50 மணி. மதியம் 3 மணி முதல் இரவு 11 மணி வரை தேவைக்கேற்ப சேவை கிடைக்கும். முன்பதிவு தேவை.
- மெரினா மால் 1 – மெரினா வாக் (BM1): காலை 10 மணி – இரவு 11.10 மணி
- மெரினா ப்ரோமெனேட் – மெரினா மால் 1 (BM1): மதியம் 1.50 – இரவு 9.45
- மெரினா டெரஸ் – மெரினா வாக் (BM1): மதியம் 1.50 – இரவு 9.50
- முழு வழி: மதியம் 3.55 – இரவு 9.50
துபாய் ஃபெர்ரி இயக்க நேரம்
- அல் குபைபா – துபாய் வாட்டர் கேனல் (FR1): மதியம் 1 மணி மற்றும் மாலை 6 மணி
- துபாய் வாட்டர் கேனல்- அல் குபைபா (FR1): மதியம் 2.25 மற்றும் இரவு 7.25
- துபாய் வாட்டர் கேனல் – புளூவாட்டர்ஸ் (FR2): மதியம் 1.50 மற்றும் மாலை 6.50
- புளூவாட்டர்ஸ் – மெரினா மால் (FR2): மதியம் 2.55 மணி மற்றும் இரவு 7.55
- மெரினா மால் – புளூவாட்டர்ஸ் (FR2): மதியம் 1 மணி மற்றும் மாலை 6 மணி
- புளூவாட்டர்ஸ் – துபாய் வாட்டர் கேனல் (FR2): மதியம் 1.20 மற்றும் மாலை 6.20
- மெரினா மாலில் இருந்து சுற்றுலாப் பயணங்கள் (FR4): காலை 11.30 மற்றும் மாலை 4.30
- அல் குபைபா – ஷார்ஜா அக்வாரியம் (FR5): பிற்பகல் 3 மணி, மாலை 5 மணி, இரவு 8 மணி மற்றும் இரவு 10 மணி
- ஷார்ஜா அக்வாரியம் – அல் குபைபா (FR5): மதியம் 2 மணி, மாலை 4 மணி, மாலை 6 மணி மற்றும் இரவு 9 மணி
- அல் ஜடாஃப், துபாய் க்ரீக் ஹார்பர் மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி (TR7) ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணங்கள்: மாலை 4 மணி – அடுத்த நாள் 12.30 மணி
அப்ரா சேவை
ஓல்ட் துபாய் சூக் – பனியாஸ் (CR3): காலை 10 மணி – இரவு 10.50 மணி
அல் ஃபாஹிதி – அல் சப்கா (CR4): காலை 10 மணி – இரவு 11.15 மணி
அல் ஃபாஹிதி – தேரா ஓல்ட் சூக் (CR5): காலை 10 – இரவு 11.30 மணி
பனியாஸ் – அல் சீஃப் (CR6): காலை 10 மணி – நள்ளிரவு
அல் சீஃப் – அல் ஃபாஹிதி – ஓல்ட் துபாய் சூக் (CR7): பிற்பகல் 3.10 – இரவு 10.55 மணி
அல் ஜடாஃப் – துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி (BM2): காலை 7.30 – மாலை 4 மணி
அல் ஜடாஃப் – துபாய் க்ரீக் துறைமுகம் (CR11): காலை 7.15 – மாலை 4 மணி
சுற்றுலா பயணங்கள்
அல் சீஃப், அல் ஃபாஹிதி, பனியாஸ் (TR10): மாலை 4 முதல் இரவு 10.15 வரை
துபாய் வாட்டர் கேனல், ஷேக் சையத் மரைன் டிரான்ஸ்போர்ட் நிலையம் (TR6): மாலை 4 முதல் இரவு 10.15 வரை
வாட்டர்ஃபிரண்ட், மராசி, பிசினஸ் பே, கோடோல்பின் (DC2): காலை 10 – இரவு 10.05
வாட்டர்ஃபிரண்ட், மராசி, பிசினஸ் பே, கோடோல்பின், ஷேக் சையத் சாலை (DC2): மாலை 3.35 – இரவு 10.05
அல் ஜடாஃப் – துபாய் டிசைன் டிஸ்ட்ரிக்ட் (DC3): மாலை 4 மணி – இரவு 10.45 மணி
மெரினா மால் 1ல் இருந்து (TR8): மாலை 4 மணி – இரவு 10.15 மணி வரை
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel