GCC நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவின் மல்டிபிள் என்ட்ரி இ-விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி..??
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிற GCC நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் ஒரு வருட மல்டி என்ட்ரி இ-விசாவிற்கு விண்ணப்பிப்பதன் மூலம் சவுதி அரேபியாவிற்கு பயணிக்க முடியும். இந்த விசாவானது வணிகப் பயணங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்ப்பது, நாட்டைச் சுற்றிப் பார்ப்பது மற்றும் உம்ரா செய்வதற்கு சவுதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதிக்கிறது. இதன்கீழ், அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் 2023 இல் தொடங்கப்பட்ட சவுதி அரேபியாவின் ஒருங்கிணைந்த விசா தளத்தின் (ksavisa.sa) மூலம் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப செயல்முறை மற்றும் தேவையான ஆவணங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
சவுதி இவிசாவுக்கான தேவைகள்
- குறைந்தது மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் ரெசிடென்ஸி ஆவணம்.
- குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகக் கூடிய பாஸ்போர்ட் .
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 வயதாக இருக்க வேண்டும், அவர்கள் பெற்றோர் இல்லாமல் பயணம் செய்தால்.
தேவையான ஆவணங்கள்
- வெள்ளை பின்னணியுடன் கூடிய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
- பாஸ்போர்ட் நகல்.
- UAE அல்லது GCC ரெசிடென்ஸி விசா பக்க நகல்
விண்ணப்ப செயல்முறை
படி 1: விசா வகையைத் தேர்ந்தெடுத்தல்
ksavisa.sa தளத்திற்குச் சென்று முகப்புப் பக்கத்தில், ‘Visit’ வகையைக் கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து பின்வரும் விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கவும்:
- வருகையின் நோக்கமாக ‘tourism’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது உங்கள் தேசியத்தை உள்ளிடவும்.
- கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ‘Valid residence in the GCC countries (No less than three months)’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதையடுத்து, ‘Show Eligible Visas’ என்பதைக் கிளிக் செய்தால், டிரான்ஸிட் விசா மற்றும் இ-விசா என்ற இரண்டு விருப்பங்கள் வழங்கப்படும். நீங்கள் eVisa விருப்பத்தின் கீழ் ‘Apply Now’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: பயண விவரங்களை வழங்குதல்:
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeமேற்கூறிய செயல்முறையில், நீங்கள் வழங்கிய விவரங்களின் அடிப்படையில், உங்கள் ரெசிடென்ஸி மற்றும் GCC வசிப்பிடம் தானாகவே நிரப்பப்படும். அதன்பிறகு, விசா வகை (சிங்கிள் அல்லது மல்டி) மற்றும் கால அளவைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பின்வரும் விவரங்களை உள்ளிட வேண்டும்:
- சவுதி அரேபியாவிற்கு பயணிக்க எதிர்பார்க்கப்படும் தேதியை உள்ளிடவும்.
- வசிக்கும் நாட்டை உள்ளிடவும்.
- உங்களுக்கு அருகிலுள்ள தூதரகத்தைத் தேர்ந்தெடுக்கவும் – அமீரகமாக இருந்தால் அபுதாபி அல்லது துபாய்.
நீங்கள் போக்குவரத்து முறை மற்றும் நுழைவு பகுதியையும் உள்ளிடலாம், ஆனால் இவை விருப்பத்திற்கு உட்டவையாகும். பின் ‘Next’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: தனிப்பட்ட தகவலை உள்ளிடுதல்
- உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உங்கள் முழுப் பெயரையும் உள்ளிடவும்.
- உங்கள் மொபைல் எண் மற்றும் முகவரியை உள்ளிடவும்.
- உங்கள் பாலினம் மற்றும் திருமண நிலையை உள்ளிடவும்.
- நீங்கள் உங்கள் தொழிலை உள்ளிடலாம், ஆனால் இது விருப்பமானது. ‘I do not work at the moment’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும் உங்களுக்கு விருப்பம் உள்ளது.
- உங்கள் தொழில் தலைப்பை உள்ளிடவும் – இது கட்டாயம். ‘I do not work at the moment’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் எதையும் உள்ளிட வேண்டியதில்லை.
- உங்கள் பிறந்த தேதியை உள்ளிடவும்.
- அடுத்து, ‘What do you plan on doing during your stay?’ என்ற கேள்விக்கு பதிலளிக்கவும், ஆனால் இது விருப்பமானது. பின்னர், கீழ்தோன்றும் மெனுவிலிருந்து உம்ரா, ஓய்வு அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
அடுத்தபடியாக, வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய, வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தைப் பதிவேற்றவும். நீங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றும்போது, அது பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- புகைப்பட அளவு – 35x45mm
- எளிய பின்னணியைப் பயன்படுத்தவும்
- உங்கள் தலையை நேராக வைத்து கேமராவை நேரடியாக எதிர்கொள்ளுங்கள்
- நடுநிலையான முகபாவனை.
- புன்னகை மற்றும் வாய் மூடப்படக்கூடாது
- நிழல்களைத் தவிர்க்க சரியான வெளிச்சத்தை உறுதிப்படுத்தவும்
- விசா விண்ணப்பத்திற்கு ஏற்றவாறு உடை அணியவும்
நீங்கள் புகைப்படத்தை PNG அல்லது JPEG வடிவத்தில் பதிவேற்ற வேண்டும், அதிகபட்ச கோப்பு அளவு 5MB ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
படி 4: உங்கள் பாஸ்போர்ட் விவரங்களை உள்ளிடுதல்
- உங்கள் பாஸ்போர்ட் நகலை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
- உங்கள் பாஸ்போர்ட் வகையைத் தேர்ந்தெடுத்து, பாஸ்போர்ட் எண்ணை உள்ளிடவும்.
- பாஸ்போர்ட் வழங்கிய நாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
- பிறந்த இடத்தை உள்ளிடவும்.
- பாஸ்போர்ட் வழங்கப்பட்ட மற்றும் காலாவதி தேதியை உள்ளிட்டு, Next’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: ரெசிடென்ஸி விசா விவரங்களை உள்ளிடுதல்
அமீரகம் அல்லது வளைகுடா நாடுகளின் குடியிருப்பாளர்கள் ரெசிடென்ஸ் விசா விபரங்களை பதிவேற்ற வேண்டும்.
- உங்கள் விசா எண்ணை உள்ளிடவும்.
- உங்கள் ரெசிடென்ஸி விசா காலாவதி தேதியை உள்ளிடவும்.
- நீங்கள் வசிக்கும் பகுதி மற்றும் உங்கள் முகவரியை உள்ளிடவும்.
படி 6: விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளுதல்
மேற்கூறிய படிகளை முடித்ததும், கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ‘Agree’ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர், உங்கள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை ஒரு முறை மதிப்பாய்வு செய்து, ‘Next’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 7: மருத்துவ காப்பீட்டைத் தேர்ந்தெடுத்தல்
- அடுத்து, ‘yes’ அல்லது ‘no’ என்பதைத் தேர்ந்தெடுத்து மருத்துவக் காப்பீட்டு கவரேஜுக்கான சில கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.
- ‘Next’ என்பதைக் கிளிக் செய்து, சவுதி அரேபியாவில் மருத்துவக் காப்பீட்டு வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு வழங்குநரின் விலையும் காண்பிக்கப்படும்.
படி 8: சவுதி இவிசா விண்ணப்பத்திற்கு பணம் செலுத்துதல்
நீங்கள் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்ததும், காப்பீட்டுச் செலவு உட்பட விசா விண்ணப்பத்தின் விலையை மதிப்பாய்வு செய்ய முடியும். ‘Pay Now’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் விண்ணப்பத்திற்கு ஆன்லைனில் பணம் செலுத்தவும்.
பணம் செலுத்தியதை உறுதிசெய்த பிறகு, உங்கள் விண்ணப்ப நிலையைக் கண்காணிக்க பரிவர்த்தனை எண்ணைப் பெறுவீர்கள். ksavisa.sa க்குச் சென்று, ‘Track Application’ என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பரிவர்த்தனை எண் அல்லது பாஸ்போர்ட் எண்ணை உள்ளிடுவதன் மூலம், விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கலாம். உங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் ksavisa.sa அழைப்பு மையத்தையும் தொடர்பு கொள்ளலாம் – 966 920011114
GCC குடியிருப்பாளர்களுக்கான சவுதி இ-விசாவுக்கு எவ்வளவு செலவாகும்?
- விசா கட்டணம்- 297.48 திர்ஹம்ஸ்.
- விண்ணப்பக் கட்டணம்- 38.5 திர்ஹம்ஸ்
கூடுதல் மருத்துவ காப்பீட்டு கட்டணம்:
சவுதி இ-விசாவுக்கான மருத்துவக் காப்பீட்டு கவரேஜ் 27.54 திர்ஹம்ஸ் முதல் 925.65 திர்ஹம்ஸ் வரை இருக்கலாம்.
சவுதி இவிசாவை எத்தனை நாட்களில் பெறலாம்?
ksavisa.sa இன் படி, GCC குடியிருப்பாளர்கள் தங்களின் விசா உடனடியாக வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம், பொதுவாக விசா வழங்குவதற்கு மூன்று வேலை நாட்கள் வரை ஆகலாம். விசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், மின்னஞ்சல் மூலம் eVisaவைப் பெறுவீர்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel