UAE: ஒவ்வொரு எமிரேட்டிலும் டாக்ஸி கட்டணம் எவ்வளவு..?? முன்பதிவு செய்வது எப்படி??
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள குடியிருப்பாளர்களும், நாட்டை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகளும் அதிகம் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து வசதிகளில் டாக்ஸி சேவையும் ஒன்று. நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் முக்கிய இடங்கள் போன்ற பிரபலமான இடங்களில் டாக்ஸி வரிசைகள் இன்னும் காணப்படுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கக்கூடிய ஏழு எமிரேட்களிலுமே உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு, ஆன்லைனிலோ அல்லது தொலைபேசியிலோ பல்வேறு சேனல்கள் மூலம் டாக்ஸியை முன்பதிவு செய்து கொள்ளலாம். இருப்பினும் டாக்ஸி முன்பதிவு தளங்கள் ஒரு எமிரேட்டில் இருந்து மற்றொன்றுக்கு மாறுபடும். அதேபோல், டாக்ஸி கட்டணமும் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு எமிரேட்டிலும் டாக்ஸியை முன்பதிவு செய்வது எப்படி?? எவ்வளவு செலவாகும்?? போன்ற விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
அபுதாபி
அமீரக தலைநகரில் டாக்ஸியைப் பெற இரண்டு வழிகள் உள்ளன:
- 600535353 என்ற ஹாட்லைன் எண்ணை டயல் செய்து அதில் கூறப்படும் வழிமுறைகளை பின்பற்றவும். இந்த முறை எளிதானது மற்றும் வசதியானது என்றாலும், உங்கள் பயணத்தை ரியல் டைமில் (real time) கண்காணிக்க முடியாது.
- மற்றொரு முறையாக, அபுதாபி டாக்ஸி செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் எண்ணுடன் உள்நுழையவும். பின் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் உங்கள் பயணத்தை கண்காணிப்பதைத் தவிர, கட்டணத்தை ஒப்பிட்டு, மேலும் எந்த வகையான டாக்ஸி உங்கள் தேவைகளுக்குப் பொருந்தும் என்பதை நீங்களே தேர்வுசெய்யலாம்.
அபுதாபியில் டாக்ஸி கட்டணம்:
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஅபுதாபியில் டாக்ஸி கட்டணங்கள் நாளின் நேரத்தைப் பொறுத்து மாறுபடும். சிட்டி டாக்ஸிகளின் கட்டண விபரங்கள் பின்வருமாறு:
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
ஆரம்ப கட்டணம்: 5 திர்ஹம்ஸ்
ஒவ்வொரு 1 கிமீக்கும்: 1.82 திர்ஹம்ஸ்
காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும்: 50 ஃபில்ஸ்
குறைந்தபட்ச கட்டணம்: 12 திர்ஹம்ஸ்
முன்பதிவு கட்டணம்: 4 திர்ஹம்ஸ்
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை
ஆரம்ப கட்டணம்: 5.50 திர்ஹம்ஸ்
ஒவ்வொரு 1 கிமீக்கும்: 1.82 திர்ஹம்ஸ்
காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும்: 50 ஃபில்ஸ்
குறைந்தபட்ச கட்டணம்: 12 திர்ஹம்ஸ்
முன்பதிவு கட்டணம்: 5 திர்ஹம்ஸ்
ஏர்போர்ட் டாக்ஸிகள்:
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
ஆரம்ப கட்டணம்: 20 திர்ஹம்ஸ்
ஒவ்வொரு 1 கிமீக்கும்: 1.82 திர்ஹம்ஸ்
காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும்: 50 ஃபில்ஸ்
முன்பதிவு கட்டணம்: 4 திர்ஹம்ஸ்
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை
ஆரம்ப கட்டணம்: 20 திர்ஹம்ஸ்
ஒவ்வொரு 1 கிமீக்கும்: 1.82 திர்ஹம்ஸ்
காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும்: 50 ஃபில்ஸ்
முன்பதிவு கட்டணம்: 5 திர்ஹம்ஸ்
துபாய்
எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) டாக்ஸி முன்பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. இது டாக்ஸி சேவைகளுக்காக ride-hailing ஆப் கரீம் உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
எனவே துபாயில் டாக்ஸிகளை முன்பதிவு செய்ய, உங்கள் ஸ்மார்ட்போனில் Careem ஐப் பதிவிறக்கவும். அப்ளிகேஷனில் நீங்கள் பல்வேறு விருப்பங்களைக் காண்பீர்கள், மேலும் நீங்கள் கேப் பயணத்தைக் கோர விரும்பினால், மெனுவிலிருந்து ‘hala taxi’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
துபாயில் டாக்ஸி கட்டணம்
துபாய் எமிரேட்டில் டாக்ஸிகளுக்கான ஆரம்ப கட்டணம் 12 திர்ஹம்ஸ் ஆகும். இருப்பினும், முக்கிய நிகழ்வுகளின் போது சில பிக்-அப் பகுதிகளில் இது 20 திர்ஹம்ஸ் வரை உயரலாம்.
ஷார்ஜா
ஷார்ஜா எமிரேட்டின் சில பகுதிகளில் டாக்ஸிகள் எளிதாகக் கிடைக்கின்றன, எனவே குடியிருப்பாளர்களும் சுற்றுலாவாசிகளும் தெருவில் இருந்தே டாக்ஸிகளை பிடிக்கலாம். டாக்ஸி அடிக்கடி கடந்து செல்லாத இடங்களில், பலர் ஹாட்லைன் மூலம் டாக்ஸியை முன்பதிவு செய்யலாம்.
- ஷார்ஜாவில் ஒரு டாக்ஸியைக் கோர 600525252 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
- டாக்சிகளை RTA ஷார்ஜா ஆப் மூலம் அல்லது ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
ஷார்ஜாவில் டாக்ஸி கட்டணம்
- குறைந்தபட்ச கட்டணம்: 14 திர்ஹம்ஸ் (இந்த விலை, மாதாந்திர எரிபொருள் விலை அறிவிப்புகளைப் பொறுத்து மாறலாம்.)
- ஒவ்வொரு 1 கிமீக்கும்: 1.62 திர்ஹம்ஸ்
அஜ்மான்
நீங்கள் அஜ்மானில் இருந்தால், கால் சென்டர் வழியாக அல்லது ஆப் மூலம் டாக்ஸியை முன்பதிவு செய்ய விருப்பம் உள்ளது.
- அஜ்மானில் உள்ளவர்கள் 600599997 என்ற ஹாட்லைன் எண்ணுக்குக்கு அழைத்து, பிரதிநிதியிடம் பேசி முன்பதிவு செய்ய முடியும்.
- ஆன்லைனில் முன்பதிவு செய்ய விரும்புவோர் ரூட் அஜ்மான் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.
அஜ்மானில் டாக்ஸி கட்டணம்
குறைந்தபட்ச கட்டணம்: 13 திர்ஹம்ஸ்
மாதாந்திர எரிபொருள் விலை அறிவிப்புகளைப் பொறுத்து ஒவ்வொரு 1 கிமீக்கும் கட்டணம் மாறுபடும்.
ராஸ் அல் கைமா
ராஸ் அல் கைமா எமிரேட்டில் டாக்ஸி சவாரிகள் ஒப்பீட்டளவில் மலிவானவை, துபாயில் கிட்டத்தட்ட பாதி விலையில் கட்டணங்கள் உள்ளன. முன்பதிவு செய்ய, Sayr அப்ளிகேஷனை பதிவிறக்கவும்.
RAK இல் டாக்ஸி கட்டணம்
காலை 6 மணி முதல் இரவு 9.59 மணி வரை ஆரம்ப கட்டணம்: 4 திர்ஹம்ஸ்
இரவு 10 மணி முதல் காலை 5.59 மணி வரை ஆரம்ப கட்டணம்: 5 திர்ஹம்ஸ்
பிற எமிரேட்டுகளுக்கான பயணங்களுக்கான ஆரம்ப கட்டணம்: 15 திர்ஹம்ஸ்
ஒவ்வொரு 595 மீட்டருக்கும்: 1 திர்ஹம்ஸ்
ஒவ்வொரு 1 கிமீக்கும்: 1.88 திர்ஹம்ஸ்
முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு காத்திருப்பு கட்டணம்: நிமிடத்திற்கு 50 ஃபில்ஸ்
குறைந்தபட்ச கட்டணம்: 6 திர்ஹம்ஸ்
ஒரு பயணத்திற்கான சேவை கட்டணம்: 2 திர்ஹம்ஸ் ஆகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel