இன்று முதல் துபாய்-அபுதாபி இடையேயான பேருந்து வழித்தடங்களில் தற்காலிக மாற்றம்!! RTA தகவல்..!!
இன்னும் ஓரிரு நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று (நவம்பர் 29) முதல் டிசம்பர் 3 வரை, துபாய் மற்றும் அபுதாபி இடையே பேருந்து வழித்தடங்களில் தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக RTA வெளியிட்டுள்ள அறிவிப்பில், அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து அபுதாபி நோக்கிச் செல்லும் ரூட் E100 இபின் பட்டுடா பேருந்து நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு திருப்பிவிடப்படும் என்றும், ரூட் E102 இபின் பட்டுட்டா பேருந்து நிலையத்திலிருந்து அபுதாபியில் உள்ள முசாஃபா ஷபியா பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அமீரகத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு, நாட்டில் உள்ள குடியிருப்பாளர்கள் நீண்ட வார விடுமுறை நாட்களை அனுபவிக்கத் தயாராகி வருவதாலும், விடுமுறை நாட்களில் போக்குவரத்தில் அதிக நெரிசல் எதிர்பார்க்கப்படுவதாலும், இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இது தவிர பயணிகள் அபுதாபிக்கு டாக்ஸியிலும் பயணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே RTA, இந்த மாத தொடக்கத்தில், துபாய் மற்றும் அபுதாபி இடையே ஒரு புதிய டாக்ஸி-பகிர்வு பைலட் சேவையை தொடங்கி வைத்தது, இந்த சேவை மூலம், பயணிகள் பயணச் செலவில் சுமார் 75% வரை சேமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeமேலும், துபாயில் இந்த வார தொடக்கத்தில், நவம்பர் 29 வெள்ளிக்கிழமை முதல் ரூட் 108 உட்பட மூன்று புதிய பேருந்து வழித்தடங்களை RTA அறிவித்தது. ரூட் 108 பேருந்து சேவையானது சத்வா பேருந்து நிலையத்தை குளோபல் வில்லேஜுடன் நேரடியாக இணைக்கிறது.
மேலும் இந்த ரூட் 108 பேருந்து சேவை வெள்ளி, சனி, ஞாயிறு, பொது விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது இயக்கப்படும். அத்துடன் சேவை நேரம் மதியம் 2 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை மற்றும் தினசரி ஒரு திசைக்கு 11 பயணங்கள் மற்றும் பயண நேரம் 60 நிமிடங்கள் ஆகும். இது தவிர ரூடர F63 மற்றும் ரூட் J05 ஆகியவை RTA அறிவித்துள்ள மற்ற இரண்டு புதிய வழித்தடங்கள் ஆகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel