அமீரக செய்திகள்

ஷார்ஜாவில் குடியிருப்புகளின் வாடகை உயர்வு: 25% வரை அதிகரிக்கலாம் என்றும் தகவல்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அல்லது அபுதாபியில் காணப்படும் 5-10% வாடகை அதிகரிப்பைத் தொடர்ந்து, ஷார்ஜாவிலும் குடியிருப்பு இடங்களின் வாடகை வேகமான அதிகரித்து வருகிறது. ஆம், ஷார்ஜாவில் உள்ள நில உரிமையாளர்கள் குத்தகையை புதுப்பிப்பதால், வாடகைக்கு குடியிருப்பவர்கள் 25% வரை வாடகை உயர்வுகளை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

ஷார்ஜா இந்த ஆண்டு வாடகையில் கூர்மையான அதிகரிப்பைக் காணத் தொடங்கியது, இது நகரத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் மற்றும் குறிப்பாக குத்தகை புதுப்பித்தல்களில் மிகவும் தெளிவாகத் தெரிவதாக ரியல் எஸ்டேட் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், மிகக் குறைந்த அடிப்படையில் வாடகை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

ஆனாலும் சில ஆதாரங்களின்படி, ஷார்ஜா எமிரேட்டில் உள்ள பிரபலமான பகுதிகள் ஒவ்வொன்றிலும் அடுக்குமாடி குடியிருப்புகளின் வாடகைகள் இதுவரை கண்டிராத விலையில் உயர்ந்து வருவதாகவும், வரும் நாட்களில் இது மேலும் தொடர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

2025 ஆம் ஆண்டிற்குள், அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது வில்லாக்கள் என எதுவாக இருந்தாலும், புதிய குடியிருப்பு விருப்பங்கள் கிடைக்கும்போதும் கூட, அதிகமான மக்கள் ஷார்ஜா எமிரேட்டில் குடியேறுவதால் வாடகை மீதான அழுத்தம் குறைய வாய்ப்பில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

பழைய மற்றும் புதிய வீடுகளுக்கு இடையிலான வாடகை இடைவெளி

தற்போதுள்ள ஒப்பந்தங்களின் வாடகை அதிகரிப்பு, புதிய கட்டிடங்கள் மற்றும் நீண்ட காலமாக உள்ள பழைய கட்டிடங்களின் வாடகைக்கு இடையில் முடிந்தவரை ‘நிலைப்படுத்த’ முயற்சிப்பதாகும்.

ஷார்ஜாவில் பழைய கட்டிடங்களைக் கொண்டுள்ள நில உரிமையாளர்கள் புதுப்பித்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் புதுப்பித்தலின் போது அதிக வாடகையைக் கேட்பதற்கு ஒரு அந்நியச் செலாவணியாகப் பயன்படுத்துகின்றனர்.

ஷார்ஜாவில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர், அவரது வாடகை உயர்வை 19% இல் இருந்து 14-15% ஆகக் குறைப்பது பற்றி எனது வீட்டு உரிமையாளர்களிடம் கோரிய போது, “குத்தகையை புதுப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை, வேண்டுமானால் நீங்கள் புதிய அப்பார்ட்மென்ட் பார்த்துக்கொள்ளலாம் ” என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஷார்ஜா வாடகை விதிகளின் கீழ், குத்தகையை புதுப்பித்தல் என்பது, நில உரிமையாளர் இரண்டு ஆண்டுகளுக்கு வாடகையை உயர்த்த முடியாது. எவ்வாறாயினும், ஷார்ஜாவில் குடியிருப்பு கட்டிடங்களின் வாடகைகள் 2025 ஆம் ஆண்டில் வலுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது . மேலும் தற்போதைய நிலையை விடவும் ஒரு கூர்மையான வளர்ச்சி கூட இருக்கலாம் என்றும் குத்தகை மேலாளர்கள் கூறுகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தை பொருத்தவரையில் துபாயில் உள்ள வீட்டு வாடகையை விடவும் ஷார்ஜாவில் குறைவு என்பதால், துபாயில் பணிபுரியும் பல குடியிருப்பாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஷார்ஜாவில் வசிப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். இதனால் ஷார்ஜா மற்றும் துபாய் இடையேயான சாலையில் காணப்படும் போக்குவரத்து நெரிசலானது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!