அமீரக விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்க புதிய கெடுபிடி.. டிராவல் நிறுவனங்கள் வெளியிட்ட அப்டேட்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட் விசாவில் வரும் நபர்களுக்கு சமீப காலமாக விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதனால் விசிட்டில் அமீரகத்திற்கு வருபவர்கள் விதிகளுக்கு ஏற்றவாறு தங்களின் ஆவணங்களை வைத்திருப்பது அவசியமாகும். மேலும் டிராவல் நிறுவனங்களும் அவ்வப்போது சுற்றுலாவாசிகளுக்கு அறிவுரை வழங்கி வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் தற்பொழுது விசிட் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னரே அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்யுமாறு சுற்றுலாவாசிகளை பயண முகவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது தொடர்பாக தெரிவிக்கையில் விசா விண்ணப்பிப்பதற்கு முன்பே ஹோட்டல் முன்பதிவு அல்லது உறவினர்களின் வசிப்பிட முகவரி போன்ற தங்குமிடத்திற்கான ஆதாரம், ரிட்டர்ன் டிக்கெட்கள் மற்றும் ஒரு மாத விசாவிற்கு 3,000 திர்ஹம்ஸ் மற்றும் இரண்டு மாதங்களுக்கு 5,000 திர்ஹம்ஸ்க்கு சமமான நிதி இருப்பதற்கான வங்கி அறிக்கைகள் போன்றவை தேவை என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
முன்னதாக, இந்த அனைத்து ஆவணங்களையும் விமான நிலையத்தில் காட்ட வேண்டும். ஆனால், இப்போது அவர்கள் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முன் இந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று பயண நிறுவனங்களின் மேலாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பயணிகள் விசிட் விசாக்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் போது தங்களைத் தாங்களே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்தவும் இந்த கடுமையான தேவைகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். சமீபத்தில் முழுமையடையாத ஆவணங்கள் காரணமாக சில விசாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், ஒரு சில விசாக்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டதாகவும் பயண நிறுவன உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஆகவே, பயணிகள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட ரிட்டர்ன் டிக்கெட் போன்றவற்றையும் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும், சில விண்ணப்பதாரர்களுக்கு இந்த புதுப்பிக்கப்பட்ட தேவைகள் பற்றி தெரியாமல் விசா விண்ணப்ப செயல்முறையில் தாமதம் மற்றும் குழப்பம் ஏற்படுவதாகக் கூறும் ஏஜென்சிகள், இதை நிவர்த்தி செய்ய, பயணிகளுக்கு கல்வி கற்பிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன மற்றும் சமர்ப்பிப்பதற்கு முன் இணக்கத்தை உறுதிப்படுத்த சரிபார்ப்பு பட்டியல்களை வழங்குகின்றன.
எனவே, சுற்றுலாவாசிகள் தங்கள் ஆவணங்களை உன்னிப்பாகத் தயார் செய்து, நம்பகமான பயண நிறுவனங்களை அணுகி, ஒரு சுமூகமான விண்ணப்பச் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலா வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel