ADVERTISEMENT

துபாயின் புத்தாண்டு கொண்டாட்டம்: அனைத்து பொது கடற்கரைகளிலும் குடும்பங்களுக்கு மட்டுமே அனுமதி…

Published: 31 Dec 2024, 3:40 PM |
Updated: 31 Dec 2024, 3:58 PM |
Posted By: Menaka

துபாயில் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து ஊழியர்களுக்கும் ஜனவரி 1 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரும் புத்தாண்டை கொண்டாட தயாராகி உள்ளனர். இந்நிலையில் எமிரேட்டில் உள்ள ஆறு பொது கடற்கரைகள் குடும்பங்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஜுமேரா பீச் 2, ஜுமேரா பீச் 3, உம் சுகீம் 1, உம் சுகீம் 2, சன்ரைஸ் பீச் மற்றும் அல் மம்சார் பீச் ஆகியவை டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு நாட்களுக்கு குடும்பங்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் எப்போதும் இதுபோன்ற பண்டிகைக் கொண்டாட்டங்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் குடும்பங்கள் அமைதியாக நேரத்தை செலவிடுவதை உறுதி செய்வதற்காக பொதுக் கடற்கரைகளை அவர்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்குவது வழக்கமான நடைமுறையாகும்.

ADVERTISEMENT

பொது விடுமுறை மாற்றும் பண்டிகை நாட்களில் இந்த கடற்கரைகள் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் காணும் என்பதால், அதை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தை சிறப்பாக்க புத்தாண்டு தினத்தன்று துபாயின் முக்கிய இலக்குகளில் கண்கவர் வானவேடிக்கை நிகழ்சிகள் மற்றும் ட்ரோன் காட்சிகள் நடைபெறும். எமிரேட் முழுவதும் மொத்தம் 36 இடங்களில் பட்டாசுகள் வானத்தை அலங்கரிக்கும். பிரமிக்க வைக்கும் வானவேடிக்கை காட்சிகளுடன் புத்தாண்டில் ஜொலிக்கும் இடங்களின் முழுப் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT
  1. புர்ஜ் கலிஃபா
  2. பாப் அல் ஷம்ஸ் டெஸர்ட் ரிசார்ட்
  3. ஜுமேரா கோல்ஃப் எஸ்டேட்ஸ்
  4. சோஃபிடெல் துபாய் தி பாம்
  5. அரேபியன் ராஞ்சஸ் கோல்ஃப் கிளப்
  6. எக்ஸ்போ சிட்டி
  7. ஒன் அண்ட் ஒன்லி  ராயல் மிராஜ் ஹோட்டல்
  8. சம்மர் – துபாய் ஃபெஸ்டிவல்
  9. துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால்
  10. அட்லாண்டிஸ் ராயல் ஹோட்டல்
  11. எமிரேட்ஸ் கோல்ஃப் கிளப்
  12. துபாய் ஃப்ரேம்
  13. பலாஸ்ஸோ வெர்சேஸ் துபாய்
  14. ஜுமேரா பீச் ஹோட்டல்
  15. தி பீச் மற்றும் புளூவாட்டர்ஸ் JBR
  16. ஹத்தா
  17. துபாய் பூங்காக்கள் மற்றும் ஓய்வு விடுதி
  18. ஃபோர் சீசன்ஸ் ஜுமேரா கடற்கரை
  19. அல் சைஃப் தெரு
  20. அட்ரெஸ் மோன்ட்கோமேரி துபாய்
  21. லீ ராயல் மெரிதீன் பீச் ரிசார்ட்
  22. JA பீச் ஹோட்டல் ஜபெல் அலி
  23. J1 பீச் (லா மெர்)
  24. டெர்ரா சோலிஸ்
  25. பல்கேரி ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்ஸ்
  26. பார்க் ஹயாட் துபாய் ஹோட்டல்
  27. நஷாமா டவுன் சதுக்கம்
  28. ஒன் அண்ட் ஒன்லி  ஹோட்டல் தி பாம்
  29. ஃபைவ் பாம் ஜுமேரா ஹோட்டல்
  30. அல் மர்மூம் ஒயாசிஸ் கேம்ப்
  31. வோகோ மொனாக்கோ துபாய்
  32. நிக்கி பீச் ரிசார்ட் துபாய்
  33. ப்ளூ ஒயாசிஸ் ரிசார்ட்
  34. க்ளோபல் வில்லேஜ்
  35. துபாய் டிசைன் டிஸ்ட்ரிக்ட்
  36. டாப் கோல்ஃப் துபாய்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel