ADVERTISEMENT

துபாய் ரியல் எஸ்டேட்டில் மற்றுமொரு சாதனை.. அபார்ட்மென்ட்டை 4.4 மில்லியன் திர்ஹம்ஸ் வாடகைக்கு எடுத்த வெளிநாட்டவர்..!!

Published: 6 Dec 2024, 2:36 PM |
Updated: 6 Dec 2024, 2:36 PM |
Posted By: Menaka

துபாயின் பாம் ஜுமேராவில் உள்ள தி ராயல் அட்லாண்டிஸ் ரிசார்ட் மற்றும் ரெசிடென்சஸில் உள்ள ஒரு பென்ட்ஹவுஸ் அபார்ட்மென்ட் ஒன்று 4.4 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பில் ஒரு வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதுவே துபாயின் வரலாற்றிலேயே ‘மிகவும் விலை உயர்ந்த’ அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட அபார்ட்மென்ட் குத்தகை என்று ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில், நான்கு படுக்கையறைகள் கொண்ட இந்த பென்ட்ஹவுஸில் ஒரு லிவிங் மற்றும் டைனிங் பகுதி, ஒரு நூலகம் மற்றும் ஒரு ஜிம் அறை ஆகியவை அடங்கும். மேலும் தேவையான அனைத்து வீட்டு பொருட்களும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 2,700 சதுர அடி மொட்டை மாடி மற்றும் நகரம் மற்றும் புர்ஜ் அல் அரபின் பரந்த காட்சிகளை வழங்கும் ஒரு வெளிப்படையான இன்பினிட்டி நீச்சல் குளமும் இதில் உள்ளது.

இந்த தனித்துவமான பென்ட்ஹவுஸை  ஒரு உயர் நிகர மதிப்புள்ள ஐரோப்பிய நாட்டை சேரந்த ஒரு குடும்பம் குத்தகைக்கு எடுத்திருப்பதாகவும், அவர்கள் துபாயில் வசிக்கவும் வேலை செய்யவும் விரைவில் திரும்ப இருப்பதாகவும் ரியல் எஸ்டேட் ஏஜென்சியான மெட்ரோபாலிட்டன் பிரீமியம் பிராப்பர்டீஸ் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அவர்கள் பென்ட்ஹவுஸை அதன் உயர்தர வசதிகள், அது வழங்கும் ஹோட்டல் வரவேற்பு சேவை பிடித்ததன் காரணமாக அதை தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது. தி ராயல் அட்லாண்டிஸ் ரிசார்ட் மற்றும் ரெசிடன்ஸியில் (The Royal Atlantis Resort and Residences) வசிப்பவர்கள் ஒரு தனியார் கடற்கரை, 17 பிரபலங்கள் தலைமையிலான உணவகங்கள், 295 அடி உயரமான இன்ஃபினிட்டி குளம் மற்றும் ஒரு அதிநவீன உடற்பயிற்சி மையம் போன்றவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT