உலகின் மிகப்பெரிய அளவிலான 300 கிலோ தங்கக் கட்டி தற்போது துபாயில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. துபாயில் தங்கத்திற்கான பிரத்யேகமான மற்றும் புகழ்பெற்ற இடமாக சிறந்த விளங்கும் துபாய் கோல்ட் சூக் பகுதியில் இந்த தங்கக்கட்டி காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. இதனை பார்வையாளர்கள் நேரில் சென்று காணலாம் என்று கூறப்படுகின்றது.
இதன் மூலம் ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்ட 250 கிலோ தங்கத்தின் முந்தைய சாதனையை துபாயில் காட்சிக்கு வைக்கப்படும் 300 கிலோ தங்கம் முறியடிக்கும் என கூறப்படுகின்றது. இன்று (டிசம்பர் 7) மற்றும் நாளை (டிசம்பர் 8) ஆகிய இரண்டு நாட்களுக்கு இங்கு வரும் பார்வையாளர்கள், துபாய் கோல்ட் சூக் எக்ஸ்டென்ஷனில் உள்ள எமிரேட்ஸ் மிண்டிங் ஃபேக்டரி கடைக்கு வெளியே இந்தப் பெரிய தங்கக் கட்டியைக் காணும் அரிய வாய்ப்பைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்த அசாதாரண தங்ககட்டியுடன் பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்து, அவர்கள் அந்த தருணத்தை நினைவுகூறலாம் என்றும் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெரிவிக்கையில் “இந்த செயல்பாடானது, தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் துறையில் புதுமை மற்றும் சிறந்து விளங்குவதற்கான துபாயின் அர்ப்பணிப்பைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வு ஆடம்பர மற்றும் வர்த்தகத்தில் துபாயின் முன்னணி நிலையை மேம்படுத்துவதில் உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது” என்று அமைப்பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel