அமீரக செய்திகள்

UAE: கவனத்தைச் சிதறடித்து வாகனம் ஓட்டியதால் கோர விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பதைபதைக்கும் வீடியோ காட்சிகளை வெளியிட்ட அபுதாபி காவல்துறை!!

சாலைகளில் பயணிக்கும் போது கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்க, அபுதாபி காவல்துறை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகளை அதன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அமீரகத்தில் ஏற்படும் வாகன விபத்துகளில் பெரும்பாலானவை வாகன ஓட்டுநரின் கவனச் சிதறலால் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, வாகன ஓட்டிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவ்வப்போது இது போன்ற விபத்துகள் நடந்த காட்சிகளை சமூக ஊடகங்களில் அபுதாபி காவல்துறை பகிரந்து வருகிறது. அந்த வகையில், தற்போது பகிரப்பட்டுள்ள வீடியோவில், ஒரு சிறிய கார் 4-வீல் டிரைவ் ரக கார் மீது மோதியதால், போக்குவரத்து வேகம் குறைந்து அதைத் தொடர்ந்து வரிசையாக பல கார்கள் மோதி பெரும் விபத்துக்குள்ளான சம்பவத்தை பகிரந்துள்ளது.

அதேபோன்று மற்றொரு நிகழ்வில், ஒரு கார் மினிவேன் மீது மோதியதில் நிலை தடுமாறி சாலையோர தடுப்புச்சுவரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானதும் காட்டப்படுகிறது. அதேபோல், மற்றொரு வாகனம் ஒன்று ஒட்டுநரின் கவனக்குறைவால் கட்டுப்பாட்டை இழந்து சுழன்று தடையின் மீது மோதி விபத்துக்குள்ளாகும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இந்த காட்சிகளை அடுத்து, கவனத்தைச் சிதறடித்து வாகனம் ஓட்டுவதால், வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து அபுதாபி காவல்துறையின் அதிகாரி ஒருவர் குடியிருப்பாளர்களுக்கு எச்சரித்துள்ளார். மேலும் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக வாகனம் ஓட்டும் போது கவனத்துடன் இருக்குமாறும் அவர் வாகன ஓட்டிகளை வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!