அமீரக சட்டங்கள்அமீரக செய்திகள்

அமீரக விசா விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதா? அபராதத்தை தள்ளுபடி செய்ய விண்ணப்பிப்பது எப்படி?

ஐக்கிய அரபு அமீரகத்தில் காலாவதியான விசாவுடன் கூடுதல் நாட்கள் தங்கியிருப்பது, போலி விசாக்களைப் பயன்படுத்துதல் உட்பட பல்வேறு விசா மீறல்கள் அவ்வப்போது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. அதே போல் அமீரகத்திற்கு விசிட் விசாவில் வருகை தரும் சுற்றுலாவாசிகளில் சிலர் தங்கள் விசா காலாவதியான பின்னரும் தற்செயலாக அதிக நாட்கள் நாட்டில் தங்குகிறார்கள், அவர்கள் விசிட் விசாக்களுக்கு எந்த சலுகைக் காலமும் இல்லை என்பது தெரியாமல் இருக்கலாம். இவ்வாறு காலாவதியான விசாவுடன் நாட்டில் தங்கியிருக்கும் ஒவ்வொரு கூடுதல் நாளைக்கும் 50 திர்ஹம்ஸ் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ரெசிடென்ஸி விசா வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் அனுமதிக்காலம் முடிந்த பிறகு அல்லது ரத்து செய்யப்பட்ட பின்னர் ஒரு சலுகைக் காலம் வழங்கப்படுகிறது. இந்த சலுகைக் காலத்தின் நீளம் அவர்களின் விசா வகையைப் பொறுத்து மாறுபடும் மற்றும் 30 நாட்கள் முதல் ஆறு மாதங்கள் வரை இருக்கலாம். இந்த சலுகைக் காலத்தை மீறும் வெளிநாட்டவர்களுக்கு, அவர்கள் தங்கியிருக்கும் ஒவ்வொரு கூடுதல் நாளைக்கும் 50 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், சில நேரங்களில் இமிக்ரேஷன் விதிகள் பற்றிய தவறான புரிதல், காகிதப்பணி தாமதங்கள் அல்லது எதிர்பாராத தனிப்பட்ட சூழ்நிலைகள் போன்ற சிக்கலான சூழ்நிலைகள் காரணமாகவும் விசா மீறல்கள் ஏற்படக்கூடும் என்பதையும் அதிகாரிகள் அங்கீகரிக்கின்றனர்.

எனவேதான் ஐக்கிய அரபு அமீரகம் அபராதத் தள்ளுபடி சேவையை (Fine waiver service) வழங்குகிறது, இது இமிகிரேஷன் சட்டங்களை மீறுவதற்கு விதிக்கப்பட்ட அபராதங்களிலிருந்து குறைப்பு அல்லது முழுமையான விலக்கு கோர தனிநபர்களை அனுமதிக்கிறது. துபாயில் இது போன்ற அபராதத் தள்ளுபடிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, தள்ளுபடி பெற தகுதியுடையவர் யார், செயல்முறை போன்ற முழுவிபரங்களும் அடங்கிய வழிகாட்டியை பின்வருமாறு காணலாம்.

விசா அபராதம் தள்ளுபடி செய்வதற்கான தகுதி

விசா அபராதத் தள்ளுபடிகள் அனைவருக்கும் கிடைக்காது. உங்கள் முதலாளி உங்களைத் தலைமறைவாகியதாகப் புகாரளித்திருந்தால், நீங்கள் மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் (MoHRE) உடன் உங்கள் வழக்கைத் தீர்ப்பதன் மூலம் அல்லது இமிகிரேஷன் அலுவலகத்திற்குச் செல்வதன் மூலம் இந்த விஷயத்தை நீங்கள் தீர்க்கலாம். இந்த அபராத விலக்கு பெற தகுதியுடையவர்களுக்கான நிபதனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • வழங்கப்பட்ட அபராதம் 4,000 திர்ஹம்ஸ் மற்றும் அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.
  • சுற்றுலா, விசிட் அல்லது ரெசிடென்ஸி விசாக்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நபர்கள்
  • சுகாதார அவசரநிலைகள், வேலை இழப்பு அல்லது எதிர்பாராத பிற நிகழ்வுகள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக தங்கள் விசா காலம் மீறி தங்கும் நபர்கள், மற்றும் சரியான ஆவணங்களை வழங்க முடிந்தவர்கள், அபராத தள்ளுபடி செய்ய தகுதியுடையவர்களாக இருக்கலாம்.
  • அபராதம் செலுத்த இயலாத அளவிற்கு குறிப்பிடத்தக்க நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நபர்கள், அபராத தள்ளுபடிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்

  1. பாஸ்போர்ட்டின் விசா பக்க நகல்
  2. விதிமீறலுக்கான காரணங்கள் மற்றும் அபராதம் செலுத்த இயலாமை ஆகியவற்றை கோடிட்டுக் காட்டும் கடிதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தனிநபர்கள் தங்கள் வழக்கை வலுப்படுத்த கூறப்பட்ட காரணங்களுக்காக அனைத்து துணை ஆதாரங்களையும் சேர்க்க வேண்டும்.
  3. அபராத குழுவால் (Fines Committee) கோரப்படும் வேறு எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பச் செயல்முறை

துபாயின் பொது இயக்குநரகம் ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்கள் (GDRFA) வலைத்தளத்தின்படி, தனிநபர்கள் சேவைகளுக்காக அமர் சேவை மையத்தைப் பார்வையிடலாம்.

  1. அருகிலுள்ள அமர் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையத்தைப் பார்வையிடவும்
  2. தானியங்கி திருப்ப டிக்கெட்டைப் (automatic turn ticket) பெறவும்.
  3. அனைத்து நிபந்தனைகளையும் ஆவணங்களையும் (ஏதேனும் இருந்தால்) பூர்த்தி செய்யும் விண்ணப்பத்தை வாடிக்கையாளர் சேவை ஊழியரிடம் சமர்ப்பிக்கவும்.
  4. இறுதியாக சேவை கட்டணத்தை செலுத்தவும் (ஏதேனும் இருந்தால்).

சேவை கட்டணம்:

சேவைக் கட்டணம் 390 திர்ஹம்ஸ் முதல் தொடங்கும், இருப்பினும் இந்த தொகை வெவ்வேறு AMER மையங்களைப் பொறுத்து மாறுபடலாம் என்று கூறப்படுகிறது. மாறாக, GDRFA அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விசா அபராதம் தள்ளுபடி செய்ய விண்ணப்பிக்கலாம். இவ்வாறு GDRFA-வை அணுக வேண்டுமெனில் உங்கள் ஆவணங்களுடன் துபாயில் உள்ள அருகிலுள்ள GDRFA அலுவலகத்தைப் பார்வையிடவும்.

பின் தேவையான ஆவணங்களுடன் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். குழு உங்கள் சமர்ப்பிப்பை மதிப்பாய்வு செய்யும், மேலும் கூடுதல் தகவல் அல்லது தெளிவுபடுத்தலைக் கோரலாம். ஸ்பான்சர் ஒரு தனிநபராக இருந்தால், 15.75 திர்ஹம்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த  சேவை ஜெனரல் அட்மினிஸ்ட்ரேஷன் – அல் அவீர் சென்டரிலும் கிடைக்கும். அதன் செயல்பாட்டு நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • திங்கள் முதல் வியாழன் வரை: காலை 7.30 – இரவு 7.00 மணி
  • வெள்ளிக்கிழமை: காலை 7.30 – நண்பகல் 12.00 மணி மற்றும் பிற்பகல் 2.30 – இரவு 7.00 மணி

விண்ணப்பம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டதும், GDRFA வழக்கை மதிப்பாய்வு செய்யும், மேலும் தகவலுக்கு உங்களைத் தொடர்பு கொள்ளலாம். செயல்முறைக்கு எடுத்துக்கொள்ளப்படும் காலத்தை அதிகாரிகள் குறிப்பிடவில்லை, இது ஒவ்வொரு வழக்கின் சிக்கல்களைப் பொருத்து மாறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!