UAE: கேன்சல் ஆன விசாவின் சலுகைக் காலத்தை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?

ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் நபர் ஒருவரின் விசா காலாவதியாகி விட்டால் அது விசிட் அல்லது ரெசிடென்ஸி என எந்த விசாவாக இருந்தாலும் காலாவதியான தேதியில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு சலுகை காலம் அளிக்கப்படும். அதேபோல் ரெசிடென்ஸி விசா ரத்து செய்யப்பட்டுவிட்டாலோ அல்லது காலாவதியாகிவிட்டாலோ, சலுகை காலத்திற்குப் பிறகு நாட்டில் தங்கியிருப்பது சட்டவிரோதமாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் ரெசிடென்ஸி விசா வகையைப் பொறுத்து 30 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை நீண்ட நெகிழ்வான சலுகைக் காலங்கள் வழங்கப்படுகின்றன. ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைக் காலம் எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்வதன் மூலம் அபராதமின்றி நாட்டில் தங்கக்கூடிய நாட்களை உறுதி செய்யலாம்.
அவ்வாறு வழங்கப்படும் சலுகைக் காலத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், UAE இன் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான (ICP) அதிகாரப்பூர்வ ஸ்மார்ட் சர்வீஸ் போர்டல் – https://smartservices.icp.gov.ae/ மூலம் சில நிமிடங்களில் ஆன்லைனில் எளிதாகச் சரிபார்க்கலாம்.
சலுகை காலத்தை ஆன்லைனில் எவ்வாறு சரிபார்க்கலாம்?
1. ICP ஸ்மார்ட் சேவைகள் இணையதளத்தைப் பார்வையிடவும் – https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/login
2. பின்னர், மெனுவில் உள்ள ‘Public Services’ என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ‘File Validity’ என்பதைக் கிளிக் செய்யவும்.
3. அடுத்து, பின்வரும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் – ‘search by file number’ அல்லது ‘passport information’ மற்றும் ‘Residency’ வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
4. நீங்கள் பாஸ்போர்ட் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் பாஸ்போர்ட் எண் காலாவதி தேதி மற்றும் தேசியத்தை உள்ளிடவும். கோப்பு எண்ணைத் (file number) தேர்வுசெய்பவர்கள் பின்வரும் விவரங்களில் ஒன்றை உள்ளிடலாம்:
- எமிரேட்ஸ் ஐடி எண்
- எமிரேட்ஸ் ஒருங்கிணைந்த எண் (UID எண்)
- கோப்பு எண் (file number)
5. அடுத்தபடியாக, உங்கள் பிறந்த தேதி மற்றும் தேசியத்தை உள்ளிடவும்.
6. இறுதியாக, ‘I’m not a robot’ கேப்ட்சாவை டிக் செய்து, ‘Search’ பட்டனை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் ‘நாட்டில் தங்க அனுமதிக்கப்பட்ட நாட்களை’ பார்க்க முடியும்.
உங்களின் அமீரக ரெசிடென்ஸி விசா ரத்துசெய்தல் படிவத்தைப் பெற்றவுடன், நீங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சரியான தேதி அல்லது உங்கள் விசா நிலையை மாற்றக்கூடிய கடைசி தேதியை படிவத்தின் கீழே காண முடியும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சலுகை காலத்திற்குள், நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேறலாம் அல்லது புதிய ரெசிடென்ஸி விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆறு மாத கால அவகாசத்துடன் உள்ள UAE ரெசிடென்ஸி விசா வகைகள்
அடையாளம் மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (UAEICP) ஐந்து விசா வகைகளில் தங்களுடைய ரெசிடென்ஸி விசாக்கள் காலாவதியான பிறகு ஆறு மாதங்கள் வரை தங்க அனுமதிக்கப்படுகிறது என்று விளக்கியுள்ளது. அவை:
1. கோல்டன் ரெசிடென்சி வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்,
2. க்ரீன் ரெசிடென்சி வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்,
3. நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவரின் விதவை அல்லது விவாகரத்து பெற்றவர்,
4. படிப்பை முடித்த பிறகு நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளால் நிதியுதவி பெறும் மாணவர்கள்,
5. மனித வளங்கள் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்தின் வகைப்பாட்டின்படி முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் திறமையான தொழில்களைக் கொண்ட நாட்டில் வசிப்பவர்கள்.
மேற்கூறிய நபர்களுக்கு ரெசிடென்ஸி விசாவின் காலம் முடிந்தாலும் 6 மாதங்கள் வரை அமீரகத்தில் தங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel