ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரில் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உணவுப் பொருட்கள் பொது சுகாதராத் தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்யவும் அவ்வப்போது அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. அதில் பொது சுகாதாரத்திற்கு அபாயத்தை ஏற்படுத்தியதற்காக அபுதாபியில் ஒரு சூப்பர் மார்க்கெட் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி 15, சனிக்கிழமையன்று, அபுதாபியின் அல் கலிதியா பகுதியில் (மேற்கு 6) பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஒரு சூப்பர் மார்க்கெட்டின் நடவடிக்கைகள் இருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டதால், அதை மூட உத்தரவிட்டதாக அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் (ADAFSA) அறிவித்துள்ளது.
அதிகாரம் வெளியிட்ட அறிவிப்பின் படி, வணிக உரிமம் எண் (CN- 4314510) உடன் ‘Saveway Supermarket’ என்ற கடை, அபுதாபி எமிரேட் இல் 2008 ஆம் ஆண்டின் உணவுச் சட்ட எண் (2) ஐ மீறியதற்காக மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், இதே போன்று ஒரு உணவகத்தில் உணவு பாதுகாப்பு தேவைகள் தொடர்பான பல தொடர்ச்சியான மீறல்கள் கண்டறியப்பட்ட பின்னர் ஆணையத்தால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel