ஷார்ஜாவில் திறக்கப்பட்ட புதிய பாதை.. நேரமும் எரிபொருளும் மிச்சப்படுவதாக குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி!!

ஷார்ஜாவில் உள்ள அல் தவூன், அல் மஜாஸ், அல் கான் மற்றும் அல் மம்சார் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அல் தவூன் ஸ்ட்ரீட்டில் புதிதாக திறக்கப்பட்ட போக்குவரத்து திசை மாற்றத்தின் (traffic diversion) விளைவாக, தங்கள் அன்றாட பயணங்களில் சிறிது நிம்மதியை உணருவதாகக் கூறி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். புதிய பாதை நெரிசலைக் கணிசமாகக் குறைத்து, போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் பயண நேரத்தை 25 நிமிடங்கள் வரை குறைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, அல் இத்திஹாட் சாலையில் இருந்து அல் தவூன் ஸ்ட்ரீட்டில் ஒற்றை எக்ஸிட் பாதையில் செல்வது குறிப்பாக மாலையில் செல்வது கடுமையான தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி நெஸ்டோ சூப்பர் மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து அதிகமாகும், அல் கான் மற்றும் அல் மம்சார் நோக்கி செல்லும் வாகனங்கள் ரவுண்டானாவில் யு-டர்ன் எடுக்கும் படி நிர்ப்பந்திக்கப்படுவதால், ஏராளமான வாகனங்களால் சாலை ஸ்தம்பித்துப் போகும். ஆனால், இப்போது, புதிய திசைதிருப்பலுடன், ஷார்ஜாவுக்குள் நுழைந்த பிறகு வீட்டை அடைய மூன்று முதல் நான்கு நிமிடங்கள் மட்டுமே ஆவதாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.
குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி
அல் தவூனில் உள்ள டெல்மா டவரில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர், போக்குவரத்து நெரிசலில் கூடுதல் நேரத்தை செலவிடுவது எவ்வளவு வெறுப்பாக இருந்தது என்பதை நினைவு கூர்ந்ததுடன், தற்போதைய மென்மையான போக்குவரத்து ஓட்டம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, அல் கூஸில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்வதற்கான மொத்த பயண நேரம் 60 நிமிடங்கள் முதல் 75 நிமிடங்கள் வரை ஆனதாகவும், ஆனால் சமீபத்தில், புதிய திசை மாற்றம் திறக்கப்பட்டதிலிருந்து போக்குவரத்தில் சிக்கிக்கொள்வதற்கு பதிலாக சில நிமிடங்களில் வீட்டிற்குச் சென்று விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு குடியிருப்பாளர், குறைந்த எக்ஸிட் விருப்பங்கள் காரணமாக பல ஆண்டுகளாக வெறுப்பூட்டும் போக்குவரத்து தாமதங்களை சகித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அல் தவூன் ஸ்ட்ரீட்டில் போக்குவரத்து நாள் முழுவதும் பயங்கரமாக இருந்ததாகக் கூறிய அவர், முன்பு வீட்டை அடைய 20 நிமிடங்களுக்கு மேல் ஆகும் என்றும், இப்போது ஷார்ஜாவிற்குள் நுழைந்த பிறகு, மூன்று நிமிடங்களில் வீட்டை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
நேரத்தையும் எரிபொருளையும் மிச்சப்படுத்துகிறது
புதிய போக்குவரத்து திசை மாற்றத்தின் விளைவாக, பயண நேரம் குறைக்கப்பட்டதுடன், எரிபொருள் செலவுகளும் குறைவதால் வசதியாக உள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கூடுதல் மேம்பாடுகளை எதிர்பார்க்கும் மக்கள்
இந்த போக்குவரத்து திசைதிருப்பலின் வெற்றியுடன், ஷார்ஜாவின் பிற நெரிசலான பகுதிகளிலும் இதே போன்ற நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று பல குடியிருப்பாளர்கள் நம்புகின்றனர். “நகரம் விரிவடைந்து வருகிறது. போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்த புதிய பாதையில் அதிகாரிகள் வழங்கிய தீர்வைப் போலவே ஆனால் அவர்கள் மற்ற போக்குவரத்து ஹாட்ஸ்பாட்களையும் கவனித்து கூடுதல் தீர்வுகளை வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel