ரமலான் பிறையை பார்க்க குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சவூதி அரேபியா..!!

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய நாடுகள் புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறையை காண்பதற்காக காத்திருக்கும் நிலையில், சவுதி அரேபியா வருகின்ற பிப்ரவரி 28, 2025 வெள்ளிக்கிழமை மாலை ரமலான் பிறையை காண நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமிய மாதமான ஷஃபான் மாதத்தின் 29 வது நாளாகும்.
பொதுவாப இஸ்லாமிய நாட்கட்டியான ஹிஜ்ரி காலெண்டரில் இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் வரை நீடிக்கும். அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், பிப்ரவரி 28 அன்று வெறும் கண்ணிலோ அல்லது தொலைநோக்கி மூலமாகவோ பிறையை பார்க்கும் எவரும், அருகிலுள்ள நீதிமன்றத்தில் தெரியப்படுத்த அல்லது நியமிக்கப்பட்ட மையத்தை தொடர்பு கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.
ரமலானைப் பொறுத்த வரை, மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை மாலை பிறை காணப்பட்டால், ரமலான் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும். இல்லையென்றால், ரமலான் மாதம் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும். முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சர்வதேச வானியல் மையம் ரமலான் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சவூதியை போன்றே அமீரகமும் விரைவில் இது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel