இஸ்லாமிய மாதமான ரமலான் மாதம் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவிருக்கும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷார்ஜா ரமலான் ஃபெஸ்டிவல் இன்று (பிப்ரவரி 22, சனிக்கிழமை) அதன் 35 வது பதிப்பில் அடியெடுத்து வைக்கிறது. இது மார்ச் 31 வரை எமிரேட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 6 ஆம் தேதி ஷார்ஜா எக்ஸ்போவில் ரமலான் நைட்ஸ் கண்காட்சியைத் தொடங்குவதும் இந்த ஃபெஸ்டிவலின் சிறப்பம்சமாகும். கண்காட்சியில் 200 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், சிறந்த சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கிட்டத்தட்ட 500 உலகளாவிய மற்றும் உள்ளூர் பிராண்டுகள் இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஃபெஸ்டிவலின் போது, பார்வையாளர்களும் குடியிருப்பாளர்களும் பொழுதுபோக்கு, சிறந்த தள்ளுபடிகள் மற்றும் அற்புதமான பரிசுகளை அனுபவிக்க முடியும். பல ஷாப்பிங் மால்கள், சில்லறை கடைகள், சிறு வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோர் பங்கேற்கும் இந்த ஃபெஸ்டிவல் மிகப்பெரிய கலாச்சார, சமூக மற்றும் பொருளாதார நிகழ்வுகளில் ஒன்றாகும்..
இது ஒரு தனித்துவமான ஷாப்பிங் அனுபவத்தையும், முழு குடும்பத்தினருக்கும் சிறந்த பொழுதுபோக்கிற்கு உறுதியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், இது எல்லா வயதினருக்கும் பலவிதமான கலாச்சார நிகழ்ச்சிகளையும் பொழுதுபோக்குகளையும் வழங்கும் என்று கூறப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel