Uncategorized

UAE: தனியார் துறை ஊழியர்களுக்கு ரமலான் மாத வேலை நேரத்தை அறிவித்த அமீரகம்!!

ஐக்கிய அரபு அமீரகம் ரமலான் மாதத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கான வேலை நேரத்தை அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது தனியார் துறை ஊழியர்களுக்கான வேலை நேரங்களை அறிவித்துள்ளது. இது தொடர்பாக X தளத்தில் மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) வெளியிட்டுள்ள பதிவில், ரமலான் மாதத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கான வேலை நேரம் தினமும் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், அந்த பதிவில், ஊழியர்களின் பணியின் தேவைகள் மற்றும் தன்மைக்கு ஏற்ப, நிறுவனங்கள் ரமலான் மாதத்தில் தினசரி வேலை நேரங்களுக்குள் நெகிழ்வான அல்லது தொலைநிலை வேலை முறைகளை செயல்படுத்தலாம் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக, அமீரக அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமையன்று, பொதுத் துறை ஊழியர்களுக்கான ரமலான் வேலை நேரத்தை வெளிப்படுத்தியது. உத்தியோகபூர்வ சுற்றறிக்கையின் படி, அமைச்சகங்கள் மற்றும் கூட்டாட்சி அதிகாரிகளுக்கான வேலை நேரம் திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இருக்கும், வெள்ளிக்கிழமைகளில், காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வேலை நீடிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் ரமலான் மாதம்  பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் மார்ச் 1, சனிக்கிழமை, தொடங்கும் என்று வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் பிறை தென்படுவதைப் பொறுத்து, ரமலான் துவங்கும் நாளும் ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்குமா என்பதும் தெரியவரும் என கூறப்படுகின்றது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!