விமான நிறுவனங்களுக்கு இந்தியா புதிய உத்தரவு.!! விமான பயணிகள் கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க…

இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது பயணிகளுக்கு அவர்களின் உரிமைகளுக்கான இணைப்பை (passanger rights link) வழங்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளுக்கு அதிகாரம் அளிப்பதையும், விமானப் பயணத்தின் போது அவர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளும் சமயத்தில் அவர்களின் உரிமைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
‘Passenger Charter of Rights’ என்று அழைக்கப்படும் இந்த இணைப்பு, விமான நிறுவனத்துடன் பயணிக்கும் போது, விமான தாமதங்கள், ரத்துசெய்தல், ஏற மறுக்கப்படுதல், லக்கேஜ்கள் இழப்பு அல்லது சேதம் மற்றும் பிற சாத்தியமான சேவை இடையூறுகள் தொடர்பான அவர்களின் உரிமைகளை விளக்கும் ஆவணத்திற்கு பயணிகளை எடுத்துச் செல்லும்.
புதிய உத்தரவின் கீழ், டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு விமான நிறுவனங்கள் இந்த இணைப்பை SMS அல்லது WhatsApp வழியாக பயணிகளுக்கு அனுப்ப வேண்டும். பயணிகள் தங்கள் உரிமைகள் குறித்து அறிந்திருப்பதை உறுதிசெய்ய, இந்த இணைப்பு விமான நிறுவனத்தின் வலைத்தளத்திலும் காட்டப்படும் என இந்திய ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
இந்த வெளிப்படைத்தன்மை பயணிகள் தங்கள் உரிமைகளைப் புரிந்துகொள்ளவும், தேவைப்படும்போது பொருத்தமான தீர்வைப் பெறவும் உதவுகிறது. இந்த மாற்றம் UAE மற்றும் இந்தியாவிற்கு இடையே அடிக்கடி பயணம் செய்யும் பல UAE குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் தேவைப்படக்கூடியதாக இருக்கும்.
சேவை சிக்கல்கள் குறித்து பயணிகளிடமிருந்து வரும் புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் DGCA இந்த உத்தரவை அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, 24 மணி நேரத்திற்கும் மேலாக விமான தாமதத்தை எதிர்கொள்ளும் பயணிகளுக்கு இலவச ஹோட்டல் தங்குமிடத்திற்கு உரிமை உண்டு. அதே போல் இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை விமானம் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால், பயணிகளுக்கு இலவச ஹோட்டல் தங்கும் உரிமையும் உண்டு.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, இந்த உத்தரவை விரைவில் செயல்படுத்துவதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்தியாவிற்கும் இந்தியாவிலிருந்தும் பயணிக்கும் பயணிகளுக்கு அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel