அமீரக செய்திகள்

அமீரகத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஈத் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..!!

ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கு அமீரக அரசு அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30, ஞாயிற்றுக்கிழமை முதல் ஏப்ரல் 1, செவ்வாய்கிழமை வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாடு முழுவதும் உள்ள அனைத்து துறை ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) தெரிவித்துள்ளது.

MoHRE வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, புனித ரமலான் மாதம் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டால், விடுமுறை ஏப்ரல் 2 புதன்கிழமை வரை நீட்டிக்கப்படும், இது ஷவ்வால் பிறையைப் பார்ப்பதைப் பொறுத்து தனியார் ஊழியர்களுக்கு நான்கு அல்லது ஐந்து நாள் வார இறுதியை வழங்க வாய்ப்புள்ளது.

அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு மார்ச் 29 அன்று பிறையைக் கண்காணிக்கத் தொடங்கும். அன்று மாலை பிறை தென்பட்டால், சனிக்கிழமை வார விடுமுறை உள்ளவர்களுக்கு சனி முதல் செவ்வாய் வரை நான்கு நாட்கள் விடுமுறையும், சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் நிறுவன ஊழியர்களுக்கு ஞாயிறு முதல் செவ்வாய் வரை மூன்று நாட்கள் விடுமுறையும் கிடைக்கும்.

இருப்பினும், அன்றைய தினம் பிறை தென்படவில்லை என்றால், ரமலான் 30 நாட்களாக நிறைவடையும். எனவே, ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் மார்ச் 31, திங்கள்கிழமையாக இருக்கும். மேலும் அன்றைய தினம் ஈத் அல் ஃபித்ர் நாளாக கொண்டாடப்படும். அதன்படி மார்ச் 31, திங்கள் முதல் ஏப்ரல் 2, புதன்கிழமை அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களாக இருக்கும். இது சனி மற்றும் ஞாயிறு விடுமுறை உள்ளவர்களுக்கு ஐந்து நாட்கள் விடுமுறையாகவும், ஞாயிறு மற்றும் விடுமுறை உள்ளவர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறையாகவும் அமையும்.

துபாய் வானியல் குழுவின் வானியல் கணிப்புகள், ரமலான் 30 நாட்களை நிறைவு செய்யும் என பரிந்துரைப்பதால், ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் அதிகபட்சம் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையை அனுபவிக்க வாய்ப்புள்ளது. மேலும், அமீரகத்தில் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்காக செயல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த விடுமுறைக் கொள்கையின் படி, பொதுத்துறை ஊழியர்களுக்கும் இதே போன்ற விடுமுறை நாட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மத்தியில், ஈத் விடுமுறைகள் நெருங்குவதால், விமான போக்குவரத்து பயணத் தேவையும் அமீரகத்தில் அதிகரித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக விமானக் கட்டணங்கள் 15-20 சதவீதமும், ஹோட்டல் கட்டணங்கள் 20-30 சதவீதமும் அதிகரித்துள்ளதாக டிராவல் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!