ஓமானில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 குழந்தைகள், ஓட்டுநர் பரிதாபமாக பலி!!

ஓமானில் நடந்த ஒரு துயரமான பேருந்து விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக ராயல் ஓமன் காவல்துறை ஜூலை 2, புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்கி கவர்னரேட்டின் (Izki Governorate) அல்-ருசைஸ் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, வழியில் இருந்த நிலையான பொருளில் மோதி கவிழ்ந்தது விபத்துக்குள்ளானதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.
இந்த துயர சம்பவத்தில் சிக்கிய ஓட்டுநர் மற்றும் மூன்று குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 12 குழந்தைகள் பல்வேறு காயங்களுக்கு ஆளாகி சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து விபத்து குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓமானில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான விபத்துகளில் இது சமீபத்திய நிகழ்வாகும். கடந்த ஆண்டு, வாகனங்களை அடித்துச் சென்ற திடீர் வெள்ளத்தில் 21 பேர் உயிரிழந்ததில் ஒன்பது மாணவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel