துபாயின் உம் சுகீமில் (Umm Suqeim) கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 31) ஒரு பிரபலமான ஷாப்பிங் வளாகத்தில் உள்ள கடையின் மீது திடீரென ஒரு கார் மோதிய சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜுமேராவில் (Jumeirah) உள்ள ஸ்பின்னீஸ் கட்டிடத்தில் (Spinneys building) அமைந்துள்ள ‘Mumuso’ கடையின் மீது ஒரு கருப்பு நிற SUV வகை கார் நேரடியாக மோதி விபத்துக்குள்ளானது. மேலும், இந்த விபத்தில் கடையின் கண்ணாடி முகப்பு சுக்குநூறாக நொறுங்கிய நிலையில், பல மணி நேரத்திற்கு பிறகும் அந்த இடத்தில் ஜன்னல் கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடந்ததாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுது., விபத்தைத் தொடர்ந்து ஸ்பின்னீஸ் வளாகத்தின் முழுமையான பாதுகாப்பு மதிப்பாய்வைத் தொடங்கியதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் “எங்கள் வாடிக்கையாளர்கள், குத்தகைதாரர்கள் அல்லது குழு உறுப்பினர்களுக்கு கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதில் நாங்கள் நிம்மதியடைகிறோம்” என்றும், தற்காலிக மற்றும் நீண்டகால பாதுகாப்பு நடவடிக்கைகள் இரண்டும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், உள்ளூர் கூட்டாளிகள் மற்றும் சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செயல்படுவதாக ஸ்பின்னீஸ் நிர்வாகம் கூறியதுடன், அவசர சேவைகள் மற்றும் சமூக உறுப்பினர்களின் விரைவான பதிலுக்கு நன்றி தெரிவித்து கொண்டது.
இந்த விபத்தை நேரில் கண்டவர்கள் இந்த காட்சி அதிர்ச்சியளிப்பதாக விவரித்துள்ளனர். அன்று பிற்பகல் தனது குழந்தைகளுடன் ஸ்பின்னீஸ் கிளைக்குச் சென்ற துபாய் குடியிருப்பாளர், “முமுசோவின் கண்ணாடி ஜன்னல் முற்றிலுமாக உடைந்திருந்தது, சுற்றி பல உடைந்த கண்ணாடிகள் இருந்தன” என்று விபத்தின் மோசமான விளைவுகளை நினைவுகூர்ந்துள்ளார். அதே நேரத்தில் இந்த சம்பவத்துக்குப் பிறகு, சேதம் இருந்தபோதிலும், கடை மீண்டும் செயல்படத் தொடங்கியது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
துபாய் இதுபோன்ற விபத்துகளைக் கண்டது இது முதல் முறை அல்ல. கடந்த வாரம், போதைப்பொருளின் உட்கொண்டு வாகனம் ஓட்டிய ஆசிய நபர், ஒரு அழகு நிலையம் மற்றும் ஐந்து வாகனங்களில் மோதியதால் அவருக்கு 10,000 திர்ஹம் அபராதம் மற்றும் அவரது உரிமம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது. அதேபோல், கடந்த 2023 ஆம் ஆண்டில், துபாயில் வேகமாக வந்த வாகனம், பிரேக்குகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக கேஸ் பெடலை அழுத்தியதால் ஒரு வணிகக் கடையில் மோதியது. ஆனால், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel