துபாயில் கடந்த சில தினங்களாக துபாய் ஏர்ஷோ பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த துபாய் ஏர்ஷோவில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இறுதி பர்வலையாளர்களுக்கான நடத்தப்படும் டெமோவின் போது, இந்திய Tejas விமானம் என்று கூறப்படும் ஒரு போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நடந்ததை தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கியுள்ளன. அந்த விமானத்தை ஓட்டிச்சென்ற விமானி பற்றிய நிலவரம் மற்றும் இந்த விபத்தால் யாருக்கேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.
இந்த விபத்தை தொடர்ந்து துபாய் ஏர்ஷோவின் இன்றைய நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் கண்காட்சிப் பகுதிக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகின்றது.
An Indian Tejas fighter jet crashed during an aerial display at the Dubai Air Show. pic.twitter.com/WjaWJlB4pl
— The Daily News (@DailyNewsJustIn) November 21, 2025