ADVERTISEMENT

துபாய்: இன்சூரன்ஸ் கவரேஜ் சிக்கல் காரணமாக மருத்துவமனை நோயாளிக்கு அவசர சிகிச்சையை மறுக்க முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது??

Published: 3 Dec 2025, 5:16 AM |
Updated: 3 Dec 2025, 5:16 AM |
Posted By: Menaka

துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட நெறிமுறைகளை கடைபிடித்து வருகின்றது. அதில் ஒன்றாக மெடிக்கல் இன்சூரன்ஸின் கீழ் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

ADVERTISEMENT

இந்நிலையில் துபாயில் தங்கள் இன்சூரன்ஸ் பெற்றிருக்கும் நெட்வொர்க்கிற்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சையை அணுக முடியுமா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். ஆனால், துபாயில் உள்ள எந்த ஒரு மருத்துவ மையமும் உயிர் காக்கும் சிகிச்சையை மறுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையானது இன்சூரன்ஸ் வழங்கப்பட்ட நெட்வொர்க்கின் கீழ் இல்லாமல் இருந்தாலும், நோயாளியின் இன்சூரன்ஸ் வகை அல்லது இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் இல்லாத மருத்துவமனை போன்ற கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் அவசர நிலையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

துபாய் சட்டத்தின் கீழ், இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் சுகாதார வழங்குநர்கள் இருவரும் நோயாளி பாதுகாப்பாகவும் ஆபத்திலிருந்தும் வெளியேறும் வரை உடனடி அவசர சிகிச்சையை உறுதி செய்ய சட்டப்படி கடமைப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

துபாய் சுகாதார காப்பீட்டு சட்டத்தின் பிரிவு 13(2) இன் படி (சட்டம் எண் 11, 2013):

  • மருத்துவமனை அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், அவசர சிகிச்சைக்கான செலவை காப்பீட்டு நிறுவனங்கள் ஈடுகட்ட வேண்டும்.

அதாவது, மருத்துவமனை தங்கள் பாலிசியின் கீழ் வரவில்லை என்றால் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இது போன்ற அவசர கால சிகிச்சைகளுக்கு பணம் செலுத்துவதை மறுக்க முடியாது.

ADVERTISEMENT

மருத்துவமனை அனைத்து அவசர நிகழ்வுகளுக்கும் சிகிச்சையளிக்க வேண்டும்

அதே சட்டத்தின் பிரிவு 15(7) கூறுகையில்

  • மருத்துவமனைகளும் இன்சூரன்ஸ் தொகையைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு நோயாளிக்கும் அவசர சிகிச்சையை மறுக்க முடியாது. அவர்கள் முதலில் நோயாளியின் நலத்தை உறுதிப்படுத்த வேண்டும், பின்னர் பணம் செலுத்துவதற்காக இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

குடியிருப்பாளர்களின் உரிமைகள்

இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் வராத மருத்துவமனை போன்ற சிக்கல்கள் காரணமாக ஒரு மருத்துவமனை அவசர சிகிச்சையை மறுத்தால், நோயாளிகள் துபாய் சுகாதார ஆணையத்தில் (DHA) புகார் அளிக்கலாம்.

துபாயின் சட்டங்கள் நோயாளி பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கின்றன என்று சட்ட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது நோயாளியின் இன்சுரன்சில் வகைப்படுத்தப்படாத மருத்துவமனைகளாக இருந்தாலும் அவசர சிகிச்சை கட்டாயமாகும், மேலும் நோயாளி உடல் நிலை சீராக வந்ததன் பின் இன்சூரன்ஸ் பாலிசி விதிமுறைகளின்படி பணம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel