ADVERTISEMENT

வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி.. பெட்ரோல், டீசல் விலை குறைவு.. ஜனவரி மாத விலைப்பட்டியலை அறிவித்த அமீரகம்!!

Published: 31 Dec 2025, 2:11 PM |
Updated: 31 Dec 2025, 2:15 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் டிசம்பர் மாதம் இன்றுடன் முடிவடையும் நிலையில், ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலைகளை அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அனைத்து எரிபொருள் வகைகளிலும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் டிசம்பர் 31 புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர். புதிய விலைகள் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஜனவரி 2026க்கான எரிபொருள் விலைகள்

  • சூப்பர் 98: லிட்டருக்கு 2.53 திர்ஹம்ஸ் (டிசம்பரில் 2.70 திர்ஹம்ஸிலிருந்து குறைவு)
  • ஸ்பெஷல் 95: லிட்டருக்கு 2.42 திர்ஹம்ஸ் திர்ஹம்ஸ் (2.58 திர்ஹம்ஸிலிருந்து குறைவு)
  • E-Plus 91: லிட்டருக்கு 2.34 திர்ஹம்ஸ் (2.51 திர்ஹம்ஸிலிருந்து குறைவு)
  • டீசல்: லிட்டருக்கு 2.55 திர்ஹம்ஸ் (2.85 திர்ஹம்ஸிலிருந்து குறைவு)

நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது டிசம்பரில் எரிபொருள் விலைகள் அதிகரித்துக் காணப்பட்டது, தற்போது ஜனவரி மாத விலை குறைப்பு வாகன ஓட்டிகளுக்கு சற்று நிம்மதியை அளித்திருக்கிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel

ADVERTISEMENT