அபுதாபியின் சாலைகளில் வேகமாக வாகனம் ஓட்டிக்கொண்டே, சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பை ஒளிபரப்பிய பொறுப்பற்ற ஓட்டுநரை அபுதாபி காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) சமூக ஊடக தளமான X இல் பகிரப்பட்ட இந்த காட்சியில், ஓட்டுநர் பாதைகளுக்கு இடையில் அதிவேகத்தில் மற்ற வாகனங்களை முந்திச் செல்லும் காட்டப்பட்டது.
#أخبارنا | #شرطة_أبوظبي تضبط سائقًا قام ببث مباشر عبر منصات التواصل أثناء القيادة
ضبطت شرطة أبوظبي، بالتعاون مع مركز المتابعة والتحكم، سائقًا متهورًا قام ببث مباشر عبر إحدى منصات التواصل الاجتماعي أثناء قيادته للمركبة، في سلوك يُشكّل خطرًا على سلامته وسلامة مستخدمي الطريق.… pic.twitter.com/DLF5tJwJ41
— شرطة أبوظبي (@ADPoliceHQ) January 16, 2026
அதே போல் அபுதாபி சாலை கேமராக்களில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவும், வாகன ஓட்டியின் பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதலை உறுதிப்படுத்தியதுடன், வேகமாக வந்த கருப்பு காரை படம் பிடித்தது. இதனை தொடர்ந்து அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டதுடன் இதுபோன்ற செயல்கள் ஓட்டுநர் மற்றும் பிற சாலை பயனர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
அத்துடன் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் பாதுகாப்பு ரோந்துப் பிரிவுகள் இந்த நடத்தையை போக்குவரத்து சட்டங்களின் கடுமையான மீறலாக விவரித்துள்ளன. கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுவதன் ஆபத்துகளையும், வாகனம் ஓட்டிக்கொண்டே சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதன் ஆபத்துகளையும் எடுத்துக்காட்டுகின்றன.
அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும், போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. மேலும் சாலை சமூக ஊடகங்களுடன் காட்சிப்படுத்தவோ அல்லது தொடர்பு கொள்ளவோ ஒரு இடம் அல்ல என்பதையும் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.
இது போன்று ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் வாகன ஓட்டிகளை கவனமாகவும் பொறுப்புடனும் இருக்குமாறு பலமுறை வலியுறுத்தியுள்ளனர், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது உயிருக்கும் சாலைப் பாதுகாப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் எச்சரித்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஷார்ஜா பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு அதிக அபராதங்களை அறிமுகப்படுத்தியது. அதன்படி பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் அல்லது தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு, பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க வாகன உரிமையாளர்கள் 20,000 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும். உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால், வாகனத்தை விடுவிப்பதற்கான கட்டணம் 30,000 திர்ஹம்ஸாக உயர்கிறது.
இதே போன்று அபுதாபி மற்றும் துபாய் ஏற்கனவே பொறுப்பற்ற வாகனம் ஓட்டிகளுக்கு 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்துள்ளன. ராஸ் அல் கைமாவில், இதற்கு மூன்று மாத வாகன பறிமுதல் உட்பட 20,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படலாம். அபராதம் செலுத்தப்படாவிட்டால் மற்றும் மூன்று மாதங்களுக்குப் பிறகும் வாகனங்கள் உரிமை கோரப்படாமல் இருந்தால், அவை ஏலம் விடப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகமானது அதன் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடுமையான விதிகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும்.
இந்த கடுமையான நடவடிக்கைகள், அமீரகம் முழுவதும் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதையும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel