சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றமானது, ரமலான் மாதம் நெருங்கி வருவதை முன்னிட்டு, நாளை மறுநாள் பிப்ரவரி 17 செவ்வாய்க்கிழமை மாலையான, ஷாபான் மாதம் 29 ஆம் தேதி அன்று ரமலான் பிறையைப் பார்க்குமாறு சவுதி அரேபியா முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பிறையை வெறும் கண்ணால் அல்லது தொலைநோக்கியைப் பயன்படுத்திப் பார்ப்பவர்கள், அருகிலுள்ள நீதிமன்றத்தில் புகாரளித்து தங்கள் சாட்சியத்தைப் பதிவு செய்ய வேண்டும் அல்லது அருகிலுள்ள நீதிமன்றத்தை அடைவதற்கான உதவிக்கு அருகிலுள்ள மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் வளைகுடா நாடுகளில் முதல் நாடாக ஓமான் வரும் பிப்ரவரி 19 ம் தேதியன்று ரமலான் மாதத்தின் முதல் நாள் என்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 17 அன்று பிறை தெரிவது சாத்தியமில்லை என்றும் வானியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த அறிவிப்பை ஓமான் வெளியிட்டுள்ளது.
இதே போல சிங்கப்பூர் மற்றும் துருக்கி நாடுகளும் பிப்ரவரி 19 அன்று ரமலான் மாத முதல் நாள் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.