ADVERTISEMENT

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய அமீரகம்..

Published: 15 Apr 2026, 5:24 AM |
Updated: 15 Apr 2026, 5:24 AM |
Posted By: admin

ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்ட உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் 2026-ஆம் ஆண்டுக்கான பட்டியலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாஸ்போர்ட்டானது எட்டு இடங்கள் முன்னேறி, உலகளவில் இரண்டாம் இடத்தையும், மத்திய கிழக்கில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.

ADVERTISEMENT

எமிராட்டி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போது முன் விசா இல்லாமல் 187 இடங்களுக்குப் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில், இந்த பாஸ்போர்ட் 36 இடங்கள் முன்னேறி, 2016-ல் 38-வது இடத்தில் இருந்து தற்போது ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின் அடிப்படையில், பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் முன் விசா பெறாமல் செல்லக்கூடிய இடங்களின் எண்ணிக்கையை வைத்து இந்தத் தரவரிசை அமைந்துள்ளது.

ADVERTISEMENT

இதனடிப்படையில் சிங்கப்பூர் உலகளவில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதாவது, சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 192 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கிறது. அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை கூட்டாக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன.

இதனை தொடர்ந்து ஸ்வீடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் நான்காம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. ஆஸ்திரியா, கிரீஸ், மால்டா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT