ADVERTISEMENT

துபாயின் உயரமான கட்டிடங்களில் டெலிவரி செய்யும் ரோபோக்கள்! Talabat தொடங்கிய புதிய சோதனை!! 

Published: 8 Sep 2026, 2:16 PM |
Updated: 8 Sep 2026, 2:16 PM |
Posted By: admin

டெலிவரி ரோபோக்களின் பயன்பாடு சமீப காலமாக இருக்கும் நிலையில் துபாயின் உயரமான கட்டிடங்களில் தானியங்கி டெலிவரி ரோபோக்களைச் சோதிப்பதற்காக, தலாபத் நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்ந்த க்விக் என்ற ரோபோட்டிக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்காக துபாய் சிலிக்கான் ஓயாசிஸில் உள்ள துபாய் டிஜிட்டல் பார்க்கின் A6 வணிகக் கட்டிடத்தில் இந்த முன்னோட்டத் திட்டம் நடைபெறுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் கீழ், டெலிவரி செய்பவர்கள் கட்டிடத்தின் உள்ளே ஒரு குறிப்பிட்ட இடத்தில் க்விக்பாட் ரோபோவிடம் ஆர்டர்களைக் கொடுப்பார்கள் என்றும் அதன்பிறகு, அந்த ரோபோ லிஃப்டில் சென்று வாடிக்கையாளரின் வீட்டு வாசலில் ஆர்டரை டெலிவரி செய்யும் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. அதே நேரத்தில் இந்த முறையில் வாடிக்கையாளர்கள் ஒரு முறை கடவுச்சொல்லைப் (OTP) பயன்படுத்தித் தங்கள் ஆர்டர்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயரமான கட்டிடங்களில் டெலிவரி செய்யும்போது, டெலிவரி செய்பவர்கள் கட்டிடத்திற்குள் நுழைவதற்காக எடுத்துக்கொள்ளும் கூடுதல் நேரம், லிஃப்டுகளுக்காகக் காத்திருப்பது, மற்றும் தனித்தனி தளங்களுக்குச் செல்வது போன்ற பணிகளைக் கையாளும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த அமைப்பு டெலிவரி செய்பவர்களுக்கு எவ்வளவு நேரத்தைச் சேமிக்க முடியும் என்பதையும், ஒரு நேரடி டெலிவரி சூழலில் நிறுவனங்களின் தொழில்நுட்பம் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பதையும் இந்தச் சோதனை மதிப்பீடு செய்யும் என்றும் தலபத் கூறியுள்ளது.

இது குறித்து தலபத் UAE-யின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சைமோனிடா சுபோடிக், கட்டிட அணுகல் மற்றும் மின்தூக்கிப் பயணத்திற்காகத் தானியங்கி ரோபோக்களைச் சோதிக்க இந்த முன்னோட்டத் திட்டம் நிறுவனத்திற்கு உதவும் என்று கூறியுள்ளார். இது பயன்பாட்டிற்கு வரும் போது டெலிவரி சேவையானது இன்னும் எளிமையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT