ADVERTISEMENT

துபாயின் பல பகுதிகளில் திடீரென வீசிய துர்நாற்றம்: காரணம் என்ன? அதிகாரிகள் நடவடிக்கை!!

Published: 10 Sep 2026, 1:46 PM |
Updated: 10 Sep 2026, 1:46 PM |
Posted By: admin

கடந்த ஒரு சில நாட்களாக துபாயில் வசிப்பவர்கள் காற்றில் ஒரு விசித்திரமான வாசனையை உணர்வதாக தெரிவித்து வருகின்றனர். துபாயில் வசிப்பவர்களில் குறிப்பாக துபாய் மெரினா, ஜுமேரா லேக் டவர்ஸ், ஜுமேரா பீச் ரெசிடென்ஸ், தி ஸ்பிரிங்ஸ், தி மெடோஸ், அல் பர்ஷா, அல் ஃபுர்ஜான் மற்றும் டிஸ்கவரி கார்டன்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் தொடர்ந்து ஒரு துர்நாற்றம் வீசுவதாகத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

துபாய் முனிசிபாலிடியின் அழைப்பு மையமும் இப்பிரச்சனை குறித்து தங்களுக்குத் தெரியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து ஸ்பிரிங்ஸ் 6-ஐச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களாக ஒரு மோசமான வாசனையை உணர்ந்ததாகவும் அது எரியும் வாசனையைப் போல இல்லாமல், “அழுகிய” மற்றும் “மோசமான” துர்நாற்றமாக இருந்ததாகவும் விவரித்துள்ளார்.

அவர் கூறுகையில் “வீட்டிற்குள்ளோ அல்லது காரிலோ அந்த வாசனையை நான் உணரவில்லை, ஆனால் திறந்த வெளியில் இருக்கும்போது அதை என்னால் உணர முடிந்தது,” என்று தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று தனது மகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோதுதான் அந்த வாசனையை முதன்முதலில் கவனித்ததாகவும் புதன்கிழமையும் அதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதே போல் பல குடியிருப்பாளர்கள் துபாயின் பல பகுதிகளில் இந்தத் தீவிரமான துர்நாற்றம் வீசுவதைத் தெரிவித்துள்ளனர், இதன் மூலம் இந்த வாசனை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பதைக் காட்டுகிறது. சிலர் இதைச் சாக்கடையை போன்று தெரிகின்றது என்று விவரித்துள்ளனர், அதே சமயம் மற்றவர்கள் இது எரியும் பிளாஸ்டிக் அல்லது ரசாயனங்களின் வாசனையைப் போல இருப்பதாகக் கூறுகின்றனர். சிலர் இந்த வாசனையை மிகவும் கடுமையான மற்றும் அழுகிய நாற்றம் என்றும் விவரித்துள்ளனர்.

துபாய் மெரினாவைச் சேர்ந்த ஒரு குடியிருப்பாளர், “மெரினாவிலிருந்து இப்போது அந்த வாசனையை உணர முடிகிறது” என்றும், அது “மிகவும் மோசமாக” இருப்பதாகவும் கூறியுள்ளார். துபாய் மெரினாவில் உள்ள மற்ற சிலரும் அது கடுமையான மற்றும் அழுகிய நாற்றம் என்று கூறினர்.

ADVERTISEMENT

JLT-யைச் சேர்ந்த பல குடியிருப்பாளர்களும் இந்தத் துர்நாற்றத்தை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர். ஒருவர், அது தங்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பும் அளவுக்கு வலுவாக இருந்ததாகக் கூறினார். அதே சமயம், JLT-யில் மூன்று ஆண்டுகளாக வசித்து வருவதாகக் கூறிய மற்றொருவர், இது போன்ற ஒன்றை முதன்முறையாக அனுபவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிலர் இந்த துர்நாற்றத்திற்கு ஜபெல் அலி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்புகின்றனர்.

இவ்வாறு நகரின் பல்வேறு பகுதிகளில் வீசும் துர்நாற்றம் குறித்து குடியிருப்பாளர்கள் அளித்த புகார்கள் தொடர்பாக முனிசிபாலிட்டி கூறுகையில் இப்பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வருவதையும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும் இது தொடர்பான புகார்கள் வந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்திய பிரதிநிதி ஒருவர், இதனை ஒரு பொதுவான பிரச்சனை என்று குறிப்பிட்டதுடன்
“எங்கள் குழு அதைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது; கவலைப்பட வேண்டாம்,” என்று தெரிவித்துள்ளார்.