துபாயின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும், துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், சனிக்கிழமையன்று ‘ஃப்ளைதுபாய்’ விமானியான’ கேப்டன் ஸ்மித் மச்சரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மச்சரை நேரில் சந்தித்த ஷேக் ஹம்தான், சமீபத்தில் விமானத்தில் நடந்த பாதுகாப்புச் சம்பவத்தின் போது உயிர்களைப் பாதுகாப்பதில் அவர் காட்டிய தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும், மச்சார் “மனித உயிர்கள் மீது மிக உயர்ந்த அளவிலான தைரியம், பொறுப்பு மற்றும் அக்கறையை” வெளிப்படுத்தியதாக ஷேக் ஹம்தான் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“எங்கள் சார்பாகவும், நாட்டின் தலைமை சார்பாகவும், அவருக்கு எங்களின் முழுமையான பாராட்டும் புகழும் உரித்தாகிறது,” என்றும் அவரது பதிவில் தெரிவித்துள்ளார்.
ப்ளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உதவிய மச்சார், ஃப்ளைதுபாய் FZ1073 விமானத்தின் பணியாளர்கள் மற்றும் பயணிகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அங்கீகரித்ததைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
மேலும் மச்சார் அமீரகத்திற்குப் பாதுகாப்பாகத் திரும்பிவிட்டதாகவும், நல்ல நிலையில் இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த ஆணையம் தெரிவித்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை வழக்கறிஞரின் உத்தரவைத் தொடர்ந்து, அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலக உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குழுவால், இந்தச் சம்பவம் தொடர்பான சூழ்நிலைகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் விசாரணையின் இரகசியத்தன்மையையும் நேர்மையையும் பேணிக்காத்துக்கொண்டே, விசாரணை தொடரும் நிலையில், அதிகாரிகள் தொடர்புடைய பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel