போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும் மத்திய கிழக்கில் பதற்றம் முழுதுமாக தணியவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் அமீரகம் ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்த நிலையில், தற்பொழுது மீண்டும் ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து அமீரகம் முழுவதும் கேட்கப்படும் சப்தங்கள், தொடர்ந்து நடைபெற்று வரும் ஏவுகணை இடைமறிப்பு நடவடிக்கைகளின் விளைவே என்று ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது. எனவே குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும், எச்சரிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ வழிகளைப் பின்பற்றுமாறும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
அதே போல் ஃபுஜைரா எமிரேட்டின் சில பகுதிகளில் கேட்கப்படும் ஒலிகள், வெற்றிகரமான வான்வழி இடைமறிப்புகளின் விளைவே என்பதை உறுதிப்படுத்தியதோடு, அதிகாரப்பூர்வ மூலங்களிலிருந்து தகவல்களைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.