ADVERTISEMENT

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு…!!! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு..!!!

Published: 18 Mar 2020, 2:02 PM |
Updated: 18 Mar 2020, 2:05 PM |
Posted By: admin

கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தற்பொழுது தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் ஏற்கெனவே காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் ஓமனில் இருந்து வந்தபோது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபர் டெல்லியை சேர்ந்த இளைஞர் என்றும், ரயில் மூலம் சென்னை வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

தற்சமயம், அவருக்கு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது.