ADVERTISEMENT

அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்படும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அதிகாரிகள்..!!

Published: 30 Apr 2022, 8:23 PM |
Updated: 30 Apr 2022, 8:36 PM |
Posted By: admin

அமீரகத்தின் பிறை பார்க்கும் குழுவானது குடியிருப்பாளர்களை இன்று பிறை பார்க்குமாறு கேட்டுக்கொண்ட நிலையில் இன்று பிறையானது தென்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாளானது மே 2 திங்கள்கிழமை கொண்டாடப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் நாளை ரமலான் மாதத்தின் கடைசி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் பிறை தென்படவில்லை என அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தற்பொழுது அமீரகத்திலும் பிறை தென்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றே, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் மே 2 அன்று ஈத் அல் ஃபித்ரை கொண்டாடவிருக்கின்றன.

ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்ட கொரோனா நெறிமுறைகளை அறிவித்த அமீரகம்..!!

ADVERTISEMENT

இதில் ஓமான் மட்டும் நாளை பிறை பார்த்த பின்னர் ஈத் அல் ஃபித்ர் எப்போது என அறிவிக்கவுள்ளது. பெரும்பாலும் மற்ற வளைகுடா நாடுகளைப் போல் அல்லாமல் ஓமான் ஒரு நாள் பின்தங்கி பெருநாளைக் கொண்டாடும் என்பது குறிப்பிடத்தக்கது.