ADVERTISEMENT

துபாயில் நடைபெற்ற இந்தியர்களுக்கான பாஸ்போர்ட் சேவை முகாம்.. 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!

Published: 27 Jun 2022, 9:50 AM |
Updated: 27 Jun 2022, 9:50 AM |
Posted By: admin

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பாஸ்போர்ட் சேவை முகாமில், 1,100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்துக்கொண்டதாக இந்திய பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ராம்குமார் தங்கராஜ் தெரிவித்தார். துபாய் மற்றும் வடக்கு அமீரகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களைச் பெற BLS International Services Ltd-இன் 12 மையங்களில் ஒரே நேரத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த முகாமில் பாஸ்போர்ட் புதுப்பித்தல் மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான பெரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நடத்தப்பட்ட மூன்றாவது சிறப்பு பாஸ்போர்ட் சேவை முகாம் இதுவாகும். முன்னதாக கடந்த மே 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெற்றது.

அமீரகத்தின் 12 இடங்களில் நடக்கும் இந்திய துணைத் தூதரகத்தின் பாஸ்போர்ட் சேவை முகாம்..!

ADVERTISEMENT

இது தொடர்பாக தங்கராஜ் கூறுகையில், “கடந்த இரண்டு சிறப்பு முகாம்களில் சுமார் 2,000 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. அதாவது ஜூன் 10 முதல், துபாயில் உள்ள இந்திய வெளிநாட்டினர் ‘தட்கல்’ சேவையின் கீழ் அவசரகால பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க, ஒரே நாளில் 570 திர்ஹம்ஸ் கூடுதலாக வசூலிக்க தூதரகம் வலியுறுத்தியது” என்றார்.