ADVERTISEMENT

துபாய்: நூதன மோசடியால் 1.8 மில்லியன் திர்ஹம்ஸ் பணத்தை இழந்த இந்திய தொழிலதிபர்.. சிக்கியது எப்படி..??

Published: 28 Jun 2024, 8:14 PM |
Updated: 28 Jun 2024, 8:14 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்களை குறிவைத்து நடத்தப்படும் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அமீரக காவல்துறையினர் பொதுமக்களை விழிப்பணர்வுடன் இருக்க தொடர்ந்து அறிவுறுத்தி விருகின்றனர். எனினும் ஒரு சில நேரங்களில் மோசடிக்காரர்கள் நூதனமான முறையில் செயல்பட்டு குடியிருப்பாளர்களை நம்பவைத்து ஏமாற்றி வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில், துபாயில் வசித்து வரும் ஒரு இந்திய தொழிலதிபர் இது போன்ற ஒரு நூதனமான மோசடியில் சிக்கி சுமார் 1.8 மில்லியன் திர்ஹம்ஸ் பணத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த மிர்ஸா இலியாஸ் பெய்க் (Mirza Iliaz Baig) என்பவர் Iveond கன்சல்டன்சி, IRA டிராவல் & டூரிஸம் மற்றும் உணவுப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களில் பிரிவுகளைக் கொண்ட ஒரு பொது வர்த்தக நிறுவனம் ஆகியவற்றை துபாயில் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது வணிகங்கள் சமீபத்தில் ஒரே நேரத்தில் ஐந்து மோசடி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டு தற்போது 1.8 மில்லியன் திர்ஹம்ஸ் வரையிலான பணத்தை இழந்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். அவரது கூற்றுப்படி, இந்த நூதன மோசடியால் லேப்டாப், LED டிவிகள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை வழங்கும் Iveond Consultancy நிறுவனம் 958,970 திர்ஹம்ஸை இழந்ததாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், இந்த மோசடியால் IRA டிராவல் & டூரிஸம் நிறுவனம் 648,000 திர்ஹம்ஸை இழந்ததுடன், வெங்காயம் மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்கிய IRA பொது வர்த்தகம் மற்றும் உணவுப் பொருட்கள் நிறுவனம் 200,315 திர்ஹம்ஸ் வரை இழப்பை சந்தித்துள்ளாதகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிர்ஸா அளித்த புகாரின்படி, டிஜிட்டல் ஜீனியஸ் டெக்னாலஜிஸ், டெமோ இன்டர்நேஷனல், நூர் அல் சித்ரா டிரேடிங், ஃபேர் வேர்ட்ஸ் கூட்ஸ் டிரேடிங் மற்றும் வஹாத் அல் ரேயான் டிரேடிங் ஆகிய இந்த ஐந்து நிறுவனங்களும் ஒரு பொதுவான முறையைப் பயன்படுத்தி மில்லியன் திர்ஹம்ஸ் கணக்கில் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

ADVERTISEMENT

அதாவது 30 முதல் 45 நாட்கள் வரை பின் தேதியிட்ட காசோலைகளுடன் (post dated cheque) பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்று கொண்டதும் பின்னர் தலைமறைவாகியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடி சம்பவம் குறித்து மிர்ஸா பெய்க் கூறும்போது, மோசடியில் ஈடுபட்ட டிஜிட்டல் ஜீனியஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் அவரின் டிராவல் நிறுவனத்தின் கீழ் 319,000 திர்ஹம்ஸிற்கு விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் அறை முன்பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

இது தவிர, சுமார் 772,800 திர்ஹம்ஸ் மதிப்புள்ள 40 சாம்சங் ஸ்க்ரீன்கள், 100 டேப்லெட்டுகள், 200 ஏர்போட்கள், 40 டிஜிட்டல் கேமராக்கள், 20 ப்ரொஜெக்டர்கள், 100 ரவுட்டர்கள் மற்றும் 30 மேக்புக்குகளையும் டிஜிட்டல் ஜீனியஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் இவரது நிறுவனத்திடம் பெற்று கொண்டு தலைமறைவாகி விட்டதாகவும் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

அமீரகத்தில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றது. சமீபத்தில் பல அமீரகவாசிகளை நம்பவைத்து ரியல் எஸ்டேட்டில் கோடி கணக்கில் சம்பாதித்து அமீரகத்தை விட்டு தலைமறைவாகிய சம்பவமும் நடந்தேறியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மக்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மிகுந்த மன உளைச்சலையும் உண்டாக்கி விடுகின்றது. எனவே தொழிலாளர்கள், முதலாளிகள், குடியிருப்பாளர்கள் என அனைவருமே இது போன்ற மோசடி கும்பல்களிடம் சிக்காமல் விழிப்புணர்வுடன் செயல்படுமாறு அதிகாரிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel