ADVERTISEMENT

ஷார்ஜாவில் வரும் தொடர்ச்சியான புதுதிட்டங்கள்.. பூங்கா, அருங்காட்சியகம், அழகான நடைபாத என மக்களை கவர மேற்கொள்ளப்படும் முயற்சிகள்..!!

Published: 23 Jul 2024, 2:55 PM |
Updated: 23 Jul 2024, 2:57 PM |
Posted By: admin

சுற்றுலா துறையையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த ஷார்ஜா அரசானது தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஷார்ஜாவின் ஆட்சியாளரும் சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினருமான மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்களால் ஷார்ஜாவில் இருக்கக்கூடிய கல்பாவில் தொடர்ச்சியான புதிய திட்டங்கள் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

‘கல்பா கேட்’ எனும் புதிய திட்டத்தில், பழக்கவழக்கங்கள், மரபுகள் உட்பட பாரம்பரியத்தின் அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் புதிய அருங்காட்சியகம் மற்றும் வெள்ளத்தால் அழிக்கப்பட்ட கோர் கல்பா கோட்டையைச் சுற்றியுள்ள பூங்கா ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஷேக் டாக்டர் சுல்தான், கல்பாவிற்கான சுற்றுச்சூழல், தொல்பொருள் மற்றும் பாரம்பரிய சுற்றுலாத் திட்டத்தையும் அறிவித்துள்ளார். மேலும் தொங்கும் தோட்டங்கள் எனப்படும் ஹாங்கிங் கார்டன்களை அல் ஹெஃபாயா ஏரியுடன் இணைக்கும் பாதையான ‘கல்பா கேட்’ திட்டத்தை நிறைவு செய்வதற்கான தற்போதைய பணிகளையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் இந்த பாதையில் நபர்கள் விழுவதைத் தடுக்க நடைபாதையைச் சுற்றி பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பாதையானது தொங்கும் தோட்டங்கள், ஏரி மற்றும் முழு கல்பா நகரத்தையும் பார்க்க அனுமதிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவை போக ஜெபல் தீம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 850 மீட்டர் உயரத்தில் சந்திரன் வடிவத் திட்டத்தையும், (கமாம் (Ghamam) (‘மேகங்களுக்கு மேலே’)) கல்பா நகரம் பெற உள்ளது. இந்த இரண்டு மாடி கட்டிடமானது, மலைகள், பள்ளத்தாக்கு மற்றும் கடற்கரையின் காட்சிகளை காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு உணவகம், ஒரு கஃபே மற்றும் ஒரு வாசிப்பு அறை இருக்கும் என்றும் தரை தளத்தில் பார்க்கும் தளங்கள், பல்நோக்கு மண்டபம் போன்றவை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதே போன்று கல்பா கிளப்பிற்காக கடல் மட்டத்திலிருந்து 850 அடி உயரத்தில் ஒரு கால்பந்து மைதானம் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எமிரேட்டின் ஆட்சியாளர் தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களுக்காக கம்யூனிகேஷன் டெக்னாலஜிஸ் ஃப்ரீ ஸோனை கல்பாவில் நிறுவியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel