ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (டிசம்பர் 18, வியாழக்கிழமை) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மோசமான வானிலை குறித்து குடியிருப்பாளர்களை எச்சரிக்கும் அதிகாரிகள், வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்கவும், முடிந்தால் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நிலையற்ற வானிலை நிலவும் போது, போக்குவரத்து மற்றும் சேவைகளை நிறுத்தி வைப்பதை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம், டெலிவரி பைக் ஓட்டுநர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அதே போல் துபாயில் நிலையற்ற வானிலை நிலவும் என துபாய் காவல்துறை குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடற்கரைகளில் இருந்து விலகி இருக்கவும், படகோட்டம் (sailing) செல்வதைத் தவிர்க்கவும், பள்ளத்தாக்குகள், வெள்ளம் ஏற்படும் பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களைத் தவிர்க்கவும், வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் பொதுமக்களுக்கு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஷார்ஜா காவல்துறையும் இதேபோன்ற எச்சரிக்கையை வெளியிட்டு, மழை காரணமாக வாகன ஓட்டுநர்கள் கவனமாக இருக்கவும், பாதுகாப்பான வாகனம் ஓட்டும் தூரத்தை பராமரிக்கவும், விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் வேகத்தைக் குறைக்கவும் வலியுறுத்தியது. அணைகள் மற்றும் பள்ளத்தாக்குகளைத் தவிர்க்கவும் ஓட்டுநர்களை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் இந்த வாரம், நாட்டின் பல பகுதிகளில் மழை, பலத்த காற்று மற்றும் குறைந்த தெரிவுநிலை உள்ளிட்ட நிலையற்ற நிலைமைகள் குறித்து குடியிருப்பாளர்களை ஏற்கெனவே எச்சரித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் ஜுமா சேலம் பின் சுவைதான், வாகனம் ஓட்டும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்துவது அல்லது படம் எடுப்பது உள்ளிட்ட ஆபத்தான நடத்தைகளுக்கு எதிராக எச்சரித்துள்ளார், இதுபோன்ற செயல்கள் பாதகமான வானிலையின் போது மோதல்களின் வாய்ப்பை கணிசமாக அதிகரிக்கின்றன என்றும் ஏற்கெனவே வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel