துபாயில் உள்ள கராமா பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த அடுக்குமாடி கட்டிடம் பரபரப்பான கராமா பகுதியில் உள்ள லுலு ஷாப்பிங் சென்டருக்கு அருகிலுள்ள கராமா பார்க் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தானது இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.45 மணியளவில் தொடங்கியது என்றும் தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் அதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்படுகின்றது.