ADVERTISEMENT

அமீரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.!! இந்திய தூதரகம் வெளியிட்ட பாதுகாப்பு அறிவுரை.!!

Published: 28 Feb 2026, 3:38 PM |
Updated: 28 Feb 2026, 3:38 PM |
Posted By: admin

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என இரு நாடுகளும் இணைந்து ஈரானில் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் நிலவும் தற்போதைய பிராந்திய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய குடியிருப்பாளர்களுக்கு இந்திய தூதரகம் பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த பதற்றமான சூழலில் அமீரகத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால், அமீரகத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், உரிய கவனம் செலுத்தவும், விழிப்புடன் இருக்கவும், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் மற்றும் தூதரகம் வெளியிடும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியவை தொடர்ந்து வழக்கம் போல் செயல்படுவதாகவும், தேவைப்பட்டால் பாதுகாப்பு தொடர்பான புதுப்பிப்புகளை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளன. மேலும் இது தொடர்பான அவசர தேவைகளுக்கு 800-46342 என்ற கால்சென்டர் எண்ணிலோ அல்லது +971543090571 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்திய தூதரகத்தை தொடர்ந்து, அபுதாபியில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் மற்றும் துபாயில் உள்ள பிலிப்பைன்ஸ் துணைத் தூதரகம் மற்றும் வடக்கு எமிரேட்ஸ் ஆகியவை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து பிலிப்பைன்ஸ் மக்களும் அமைதியாக இருக்கவும், அமீரக அரசாங்கம் மற்றும் பிலிப்பைன்ஸ் தூதரகம்/துணைத் தூதரகம் வெளியிடும் செய்திகளையும், அதிகாரப்பூர்வ ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT