ADVERTISEMENT

துபாய் ஏர்போர்ட்டில் சிறிய சேதத்தால் 4 பேர் காயம்.. புர்ஜ் அல் அரபில் இடைமறிக்கப்பட்ட ட்ரோன்.. ஜபெல் அலி போர்ட்டிலும் தீ விபத்து பதிவு..

Published: 1 Mar 2026, 3:51 AM |
Updated: 1 Mar 2026, 3:51 AM |
Posted By: admin

ஈரானிய ஏவுகணைகள் தொடர்ந்து அமீரகத்தை தாக்கி வரும் நிலையில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) தாக்குதலை இடைமறிக்கும் போது எற்பட்ட சம்பவத்தில் சிறிய சேதம் ஏற்பட்டதாகவும் அது விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் துபாய் விமான நிலையங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிலைமையைக் கையாண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு ஊழியர்கள் காயமடைந்தனர் மற்றும் அவர்கள் உடனடி மருத்துவ உதவியைப் பெற்றனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் துபாயின் திறமையான அதிகாரிகள், இடைமறிப்பு நடவடிக்கைகளின் விளைவாக ஜெபல் அலி துறைமுகத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படாமல் தீயை உடனடியாகக் கட்டுப்படுத்தின என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அது மட்டுமல்லாமல் துபாயின் புர்ஜ் அல் அரப் ஹோட்டல் மீது ஏவப்பட்ட ட்ரோன் இடைமறிக்கப்பட்டது என்றும் இதில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஒரு ட்ரோனை இடைமறித்ததாக அறிவித்துள்ளனர்., மேலும் அதன் பாகங்கள் புர்ஜ் அல் அரப் ஹோட்டலின் வெளிப்புற முகப்பில் மட்டுப்படுத்தப்பட்ட தீயை ஏற்படுத்தின என கூறப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்பு குழுக்கள் எந்த காயமும் ஏற்படாமல் சம்பவத்தை கட்டுப்படுத்த முடிந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT