ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே தொடர்ந்து 9-வது நாளாக போர் நீடிக்கும் நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குஎதிராக குறைந்தது ஆறு மாதங்களுக்கு கடுமையான போரை நடத்த முடியும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை ஞாயிற்றுக்கிழமை ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தனது அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியதற்காக இரானின் அதிபர் மன்னிப்பு நேற்று கோரியிருந்த நிலையில் நேற்று இரவில் அமீரகம், சவூதி அரேபியா, குவைத், கத்தார், அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் முழுவதும் தீவிர தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகள் (Iran Revolutionary Guards) தற்போதைய நடவடிக்கைகளின் வேகத்தில் குறைந்தது 6 மாத கால தீவிரப் போரை தொடரும் திறன் கொண்டவை” என்று கார்ட்ஸின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி கூறியதாக ஃபார்ஸ் தெரிவித்துள்ளது.
ஈரானின் உயரடுக்கு படையான தி கார்ட்ஸ், பிராந்தியம் முழுவதும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய “200க்கும் மேற்பட்ட” இடங்களை குறிவைத்ததாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.