ADVERTISEMENT

அமீரகத்தின் மீதான தொடர் தாக்குதலை கடுமையாக கண்டித்த வெளியுறவு அமைச்சகம்.!!

Published: 8 Mar 2026, 6:16 PM |
Updated: 8 Mar 2026, 6:16 PM |
Posted By: admin

ஈரானின் தாக்குதலானது நேற்று நள்ளிரவு முதல் வளைகுடா நாடுகள் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், இன்று காலை முதல் தற்போது வரை மட்டும் அமீரகத்தில் பல முறை தொடர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் ஈரானின் இந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை அமீரக வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் போர் விமானம் மூலம் அமீரகம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

ADVERTISEMENT

ஈரானின் இந்த வான்வெளி தாக்குலை அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் கடுமையாக கண்டித்ததுடன், இதனை வன்மையான ஆக்கிரமிப்பு என்றும் விவரித்துள்ளது. மேலும் எந்தவொரு மோதலிலும் அமீரகம் ஈடுபட விரும்பவில்லை என்று வலியுறுத்தியதுடன், அமீரகம் பாதுகாப்பு நிலையில் இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது,

ஈரானிய தாக்குதல்களில், நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் தளங்களை குறிவைத்து, இதுவரை 1,400 க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், இதன் விளைவாக பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், இந்தத் தாக்குதல்களை “சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் அப்பட்டமான மீறல்” என்று ஐக்கிய அரபு அமீரகம் விவரித்ததுடன், ஈரானின் இந்த செயல்பாடுகள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகவும், அதன் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மோதல்கள் அல்லது மோதலில் ஈடுபட முயற்சிக்கவில்லை என்பதை வலியுறுத்தும் அதே வேளையில், அதன் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாட்டின் முழு உரிமையையும் அமீரகம் கொண்டிருப்பதாகவும் அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

ADVERTISEMENT

சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின்படி, நாட்டின் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பைப் பாதுகாப்பது ஒரு முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர். வளைகுடா பிராந்தியத்தில் பல நாடுகளைப் பாதித்த, ஈரானின் சமீபத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel