அமீரகத்தில் ஈரான் தாக்குதல் தொடங்கியதில் இருந்து தாக்குதலுக்கு முன்னர் அப்பகுதி மக்கள் அனைவரும் அதிக சப்தத்துடன் கூடிய உயர் எச்சரிக்கை செய்தியை தங்களது மொபைல் ஃபோனில் பெறுவார்கள். அதனை தொடர்ந்து தாக்குதல் முடிந்ததும் அதனை தெரியப்படுத்தும் விதமாக மற்றுமொரு எச்சரிக்கை செய்தியை பெறுவார்கள்.
இந்நிலையில் அமீரகத்தின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் மார்ச் 9 அன்று தேசிய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு ஒலி மாற்றப்படும் என்று அறிவித்துள்ளது.
அதாவது அமைச்சகம் இது குறித்து தெரிவிக்கையில், காலை 9 மணி முதல் இரவு 10.30 மணி வரை, எச்சரிக்கைக்கான தற்போதைய உயர் தொனி மற்றும் தாக்குதல் முடிந்த பின்னர் அனைவருக்கும் வரும் செய்தியில் முடிவுக்கான நிலையான குறுஞ்செய்தி தொனி (standard text message tone) பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.
அதே நேரத்தில் இரவு 10.30 மணி முதல் காலை 9 மணி வரை, எச்சரிக்கை மற்றும் எச்சரிக்கையின் முடிவு இரண்டிற்கும் நிலையான செய்தி தொனி (standard text message tone) பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.