ADVERTISEMENT

துபாயின் ஆரக்கிள் கட்டிடத்தில் விழுந்த ஏவுகணை பாகங்கள்.. யாருக்கும் காயமில்லை என தகவல்..

Published: 4 Apr 2026, 10:33 AM |
Updated: 4 Apr 2026, 10:33 AM |
Posted By: admin

துபாய் இன்டர்நெட் சிட்டியில் உள்ள ஆரக்கிள் கட்டிடத்தின் முகப்பில் ஏவுகணை சிதறல்கள் விழுந்ததால் ஏற்பட்ட ஒரு சிறிய பாதிப்பிற்கு துபாய் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் வெற்றிகரமான வான்வழி இடைமறிப்பின் காரணமாகவே இது நிகழ்ந்தது எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

அத்துடன் இந்தச் சம்பவத்தின் விளைவாக எந்த உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்றும் துபாய் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் சரியான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களையே நம்புமாறும், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதையோ அல்லது பரப்புவதையோ தவிர்க்குமாறும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT