அமீரக செய்திகள்

அமீரகத்தில் ஈத் அல் பித்ர் எப்போது..?? எத்தனை நாட்கள் விடுமுறை..??

அமீரகத்தில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு வைத்துக்கொண்டிருக்கும் வேளையில், ரமலான் முடிந்து வரும் ஈத் அல் பித்ர் தினத்தை  எமிரேட்ஸ் வானியல் சங்கம் (EAS) கணித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஈத் அல் பித்ர் அமீரகத்தில் மே 2 ஆம் தேதி வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக விடுமுறை நாட்காட்டியின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை ஈத் அல் பித்ர் விடுமுறை இருக்கும்.

மேலும் இந்த ஆண்டு, ரமலான் மாதம் மே 1 வரை 30 நாட்கள் நீடிக்கும் என்றும் இதன் காரணமாக மே 2 இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் பித்ரின் முதல் நாளாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் விடுமுறை நாட்கள் ஏப்ரல் 30 சனிக்கிழமை முதல் மே 4 புதன் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இந்த நாட்கள் பிறை பார்ப்பதைப் பொறுத்து அதிகாரப்பூர்வமாக தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!