அமீரக செய்திகள்

அமீரகத்தில் விமான முன்பதிவு செய்தவர்களுக்கு சலுகை அறிவிப்பு!!

கடந்த நான்கு மாதங்களாக உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். தற்பொழுது வரை உலகின் பல நாடுகளில் தனது கொடூரத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகின் பல நாடுகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காற்றில் எளிதில் பரவுவதால் மக்கள் பெரிதும் கூடும் இடங்களில் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸின் பரவலைதடுக்க பல நாடுகள் தங்கள் நாடுகளில் பிற நாட்டவர்கள் வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மேலும் பல நாடுகள் தங்கள் நாட்டில் வசிப்பவர்களுக்கு வெளிநாடு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்திலும் வெளிநாடு செல்ல விரும்புவோருக்கும் வெளிநாட்டிலிருந்து அமீரகத்திற்கு வருபவருக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. இதனையொட்டி அமீரகத்தில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க உள்ளது.

கொரோனாவின் தாக்கத்தால், அமீரகத்தில் ஏற்கெனவே முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களை கேன்சல் செய்பவர்களுக்கும் மற்றும் பயணத்தேதியை மாற்றி அமைக்க விரும்புபவர்களுக்கும் சலுகைகளை வழங்க உள்ளதாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

எமிரேட்ஸ் (Emirates Airlines)

துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனம் அதன் பயணிகளுக்கு கட்டணம் ஏதுமின்றி தங்கள் பயண தேதிகளை இலவசமாக மாற்றுவதற்கு அனுமதிக்கிறது. இது எமிரேட்ஸ் நெட்வொர்க் உள்ள அனைத்து இடங்களுக்கும் செல்லுபடியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சலுகையானது மார்ச் 7 முதல் மார்ச் 31 வரை வழங்கப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே முன்பதிவு வகுப்பில் 11 மாத வரம்பிற்குள் வாடிக்கையாளர்கள் தங்கள் முன்பதிவை எந்த தேதிக்கும் மாற்ற முடியும். டிக்கெட் விலையில் வேறுபாடு ஏதேனும் இருந்தாலும் இந்த சலுகை பொருந்தும்.

டிக்கெட்களுக்கான தற்போதைய ரீஃபண்ட் மற்றும் மறுமுன்பதிவு சலுகை மார்ச் 5 ம் தேதிக்கு முன்னளிக்கப்பட்ட டிக்கெட்களுக்கு பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது .

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் தலைமை வணிக அதிகாரி அட்னான் காசிம் கூறியதாவது : பயணத் திட்டங்களைச் செய்யும்போது எங்கள் வாடிக்கையாளர்கள் முழு ஆதரவையும், வசதியையும், நம்பிக்கையையும் உணர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அதே நேரத்தில் சிறந்த கட்டணங்களை அவர்களுக்கு வழங்குகிறோம், மாற்றுவதற்கானக் கட்டணம் செலுத்தாமல், பயணத் தேதிகளை வாடிக்கையாளர்கள் மாற்றிக்கொள்ளலாம். இந்த நிலைமை மாறும், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, வசதி மற்றும் மன அமைதியை வழங்குவதற்கான வழிகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம்.” என்று கூறியுள்ளார்.

எத்திஹாட் (Etihad Airways)

கொரோனா வைரஸ் காரணமாக அபுதாபியை தளமாகக் கொண்ட எத்திஹாட் ஏர்வேஸ் பயணிகள் தங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்வதற்கும் முன்பதிவு செய்த தேதிகளை மாற்றுவதற்கும் சிறப்பு தள்ளுபடியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜூன் 30க்கு முன் பயணத்தை மேற்கொள்ள இருக்கும் பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய விமானத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஜூலை 15 வரை நிலையான மாற்றுவதற்கான கட்டணம் இல்லாமல், பயணத்தேதிகளை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் .

ஒரு முறை மட்டுமே மாற்றுவதற்கானக் கட்டணம் இல்லாமல் பயணத்தேதிகளை மாற்ற அனுமதிக்கப்படுகிறது. இரண்டாவது முறையாக பயணத்தேதியை மாற்ற விரும்பினால் அவர்கள் பயணத்தேதியை மாற்றுவதற்கான கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் பயணிகள் தங்கள் டிக்கெட்களை கேன்சல் செய்ய அனுமதி கோரலாம். இந்நிலையில் அவர்களின் ரீஃபண்ட் பணமானது கட்டணம் ஏதுமின்றி முழுவதுமாகக் கிடைக்கும்.

ஃப்ளை துபாய் (Fly Dubai)

ஃப்ளை துபாய் விமான நிறுவனம், முன்பதிவு செய்த தேதியை மாற்ற விரும்பும் பயணிகளுக்கும் டிக்கெட்டை கேன்சல் செய்து ரீஃபண்ட் பெற விரும்புவோருக்கும் சலுகைகளை அளிக்கிறது.

ஏற்கனவே உள்ள முன்பதிவை மாற்ற வேண்டிய பயணிகள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பி முன்பதிவை மாற்றி அமைக்கவோ அல்லது பணத்தைத் திரும்பப் பெறவோ முடியும்.

ஏர் அரேபியா (Air Arabia)

சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத் மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் விதிக்கப்பட்டிருக்கும் பயணக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் ஏர் அரேபியாவின் கால் சென்டரைத் தொடர்புகொள்வதன் மூலம் எந்த கட்டணமும் இன்றி தங்கள் பயணங்களை மாற்றி அமைக்கவோ அல்லது ரத்து செய்யவோ முடிவெடுக்கலாம் என்று ஷார்ஜாவை தலைமையிடமாகக் கொண்ட ஏர் அரேபியா தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!