இலங்கை : கொழும்பு சர்வதேச விமான நிலையம் தற்காலிக மூடல்..!!! கத்தார், பஹ்ரைன், கனடா பயணிகள் இலங்கையில் நுழைய தடை…!!!
உலகிலுள்ள 100க்கும் மேலான நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அனைத்து நாடுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில், இலங்கையில் இதுவரை 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
ஏற்கெனவே, கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு நுழைவு விசா வழங்குவதை இலங்கை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது போக்குவரத்து, அருங்காட்சியகங்களுக்கு தடை, பள்ளிகளுக்கு விடுமுறை என பல்வேறு துறைகளில் பல கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், தற்பொழுது இலங்கையின் முக்கிய சர்வதேச விமான நிலையமான கொழும்பு விமான நிலையத்தை இரு வாரங்களுக்கு மூடுமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
அனைத்து விமானப் பயணிகளும் கொழும்பு விமான நிலையத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக, கத்தார், பஹ்ரைன் மற்றும் கனடாவில் இருந்து வரும் பயணிகள் இலங்கையில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.